பின்னால் வேண்டாம்.. முடியல விட்ரு.. கதறிய தாய்.. குழந்தை கண் முன்.. 8 ஆண்டுகள் கழித்து சிக்கிய கொடூரன்..

நியூ ஜெர்ஸி, நவம்பர் 20, 2025: ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சசிகலா நர்ரா (38) மற்றும் அவரது 6 வயது மகன் அனிஷ் நர்ரா ஆகியோர் நியூ ஜெர்ஸியில் உள்ள தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்த நாசீன் ஹமீது என்ற வாலிபர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர்.

இந்தக் கொடூரக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஹமீது, தற்போது இந்தியாவில் உள்ள நிலையில், அவரை அமெரிக்காவுக்கு ஒப்படைக்க (Extradition) கோரி அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பர்லிங்டன் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் தலைமைப் புலனாய்வாளர் பேட்ரிக் தார்ன்டன் மீடியாவிடம் பேசுகையில், "இந்தச் சம்பவம் 2017-ல் நடந்தபோது, ஹமீது விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்தார். கொலைக்குப் பிறகு அவர் இந்தியா திரும்பி, இங்கேயே தங்கிவிட்டார்" என்று தெரிவித்தார்.

அமெரிக்க மீடியாக்களின் அறிக்கைகளின்படி, ஹமீது சசிகலா நர்ராவின் கணவரான ஹனு நர்ராவுடன் நியூ ஜெர்ஸியைத் தளமாகக் கொண்ட காக்னிஸன்ட் டெக்னாலஜீஸ் (Cognizant Technologies) நிறுவனத்தில் சக ஊழியராகப் பணியாற்றியவர்.

அவர் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் வசித்து வந்ததாகவும் அரசு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.சம்பவம் நடந்த 2017 மார்ச் 23 அன்று, ஹனு நர்ரா தனது மாப்பிள் ஷேட் பகுதியிலுள்ள ஃபாக்ஸ் மெடோ குடியிருப்புக்குத் திரும்பியபோது, மனைவி சசிகலாவும் மகன் அனிஷும் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டார்.

பின்னால் வேண்டாம்.. முடியல விட்ரு.. 

போலீஸ் விசாரணையில், இருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றதற்கான காயங்கள் உடலில் இருந்ததாகத் தெரியவந்தது. குறிப்பாக, சசிகலாவின் பின்னால் கொடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளான் கொலையாளி. வலி தாங்க முடியாமல் பின்னால் தாக்க வேண்டாம்.. முடியல விட்ரு.. என கதறிய சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தக் கறை மாதிரிகளில் ஒரு துளி ரத்தம், பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது ஹனு நர்ராவுக்கோ சொந்தமானது அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கொலை நடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு ஹமீது இந்தியாவுக்குத் திரும்பினார். அதற்கு முன்பு, ஹனு நர்ராவைத் தொந்தரவு செய்ததாக (Stalking) அவர் மீது புகார் இருந்ததால், போலீஸாரின் சந்தேகப் பட்டியலில் அவர் சிக்கினார்.

இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் விசாரணை தாமதமானது. தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி குற்றத் தடயங்களை மறைக்க ஹமீது முயற்சித்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

வழக்கில் திருப்புமுனையாக, 2024-ல் கோர்ட் உத்தரவு பெற்று, காக்னிஸன்ட் நிறுவனத்திடம் ஹமீது பயன்படுத்திய லேப்டாப்பை அமெரிக்க அதிகாரிகள் கோரினர். அந்த லேப்டாப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட டிஎன்ஏ (DNA) மாதிரி, சம்பவ இடத்தில் கிடைத்த தெரியாத ரத்தக் கறையுடன் ஒத்துப்போனது.

இதைத் தொடர்ந்து, ஹமீது மீது கொலை மற்றும் அதுதொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தியாவில் உள்ள அவரிடம் டிஎன்ஏ மாதிரி கோரியபோது அவர் மறுத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஹமீதின் நோக்கம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், ஹனு நர்ரா மீது தனிப்பட்ட கோபம் இருந்திருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. தற்போது, அமெரிக்க நீதித் துறையுடன் (Department of Justice) இணைந்து புலனாய்வாளர்கள் ஹமீதை ஒப்படைக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம், சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் பழைய வழக்குகளைத் தீர்க்கும் முயற்சிகளுக்கு உதாரணமாக அமைந்துள்ளது. மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : Eight years after Sasikala Narra and her six-year-old son Anish were stabbed to death in their New Jersey apartment, US authorities have charged Indian national Naseen Hameed. A former colleague of the victim's husband at Cognizant, Hameed's DNA from his laptop matched blood at the scene. He fled to India; extradition is being sought.