எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம்! கர்ப்பமாக்கியது யார் என தெரிந்து அதிர்ந்து போன நீதிமன்றம்..!
திருவண்ணாமலை, டிசம்பர் 20 : தனது சொந்த மகளை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 47). நாட்டு வைத்தியம் பார்த்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார். கன்னியப்பனின் மனைவி குழந்தை பிறந்த சில காலத்திலேயே கால்கள் செயலிழந்து நடக்க முடியாத நிலைக்கு ஆளானார். இதனால், அவர்களது மகள் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, பாட்டியின் பராமரிப்பில் அரசு பள்ளியில் படித்து வந்தார். 2021-ஆம் ஆண்டு, சிறுமி 8-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, ஒரு நாள் பள்ளிக்கு சென்றார். அப்போது சிறுமியின் வயிறு சற்று பெரிதாக தெரிந்ததை கண்ட ஆசிரியை, இது குறித்து விசாரித்தார். பாட்டியிடம் தகவல் தெரிவித்த ஆசிரியை, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சிறுமி 8 மாத...