பின்னால் வேண்டாம்.. முடியல விட்ரு.. கதறிய தாய்.. குழந்தை கண் முன்.. 8 ஆண்டுகள் கழித்து சிக்கிய கொடூரன்..
நியூ ஜெர்ஸி, நவம்பர் 20, 2025: ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சசிகலா நர்ரா (38) மற்றும் அவரது 6 வயது மகன் அனிஷ் நர்ரா ஆகியோர் நியூ ஜெர்ஸியில் உள்ள தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்த நாசீன் ஹமீது என்ற வாலிபர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். இந்தக் கொடூரக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஹமீது, தற்போது இந்தியாவில் உள்ள நிலையில், அவரை அமெரிக்காவுக்கு ஒப்படைக்க (Extradition) கோரி அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பர்லிங்டன் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் தலைமைப் புலனாய்வாளர் பேட்ரிக் தார்ன்டன் மீடியாவிடம் பேசுகையில், "இந்தச் சம்பவம் 2017-ல் நடந்தபோது, ஹமீது விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்தார். கொலைக்குப் பிறகு அவர் இந்தியா திரும்பி, இங்கேயே தங்கிவிட்டார்" என்று தெரிவித்தார். அமெரிக்க மீடியாக்களின் அறிக்கைகளின்படி, ஹமீது சசிகலா நர்ராவின் கணவரான ஹனு நர்ராவுடன் நியூ ஜெர்ஸியைத் தளமாகக் கொண்ட காக்னிஸன்ட் டெக்னாலஜீஸ் ...