“வவ்வாலு ஆட்டம் தாங்கலப்பா” செய்தியாளரை பகிரங்கமாக மிரட்டிய பிளாக் மெயில் ராணி.. போலீஸ் அதிரடி..!

திருவள்ளூர், நவம்பர் 6: திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் செய்தியாளரை பகிரங்கமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கடம்பத்தூர் சேர்ந்த பெண் ஹேமலதா உள்ளிட்ட இருவர் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜாமீனில் வெளியே வந்த நாட்களிலேயே செய்தியாளருக்கு தொடர் மிரட்டல் அளித்ததும், போலீஸாரை அவதூறாக பேசியதும் இவர்களின் குற்றச்சாட்டுகளாக உள்ளன.

கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு எதிரே ஜூஸ் கடை நடத்தி வரும் ஹேமலதா, சில மாதங்களுக்கு முன் ஆண் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்கு சென்று நடனமாடி பணம் பறித்ததாகவும், ஒரு நண்பரின் வீட்டில் பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பிளாக்மெயில் செய்ததாகவும் வழக்கையில் சிக்கினார்.

கடம்பத்தூர் போலீஸார் இவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ஹேமலதா, அந்த செய்தியாளருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களிலும், மனித உரிமை ஆணையத்திலும் பொய்யான புகார்களைப் பதிவு செய்து மிரட்டல் அளித்து வந்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் நின்றிருந்த அந்த செய்தியாளரை கண்டதும், ஹேமலதா கோபத்தில் ஆவேசமடைந்தார். "இவன் தான் என்னை வவ்வாலுன்னு சொல்லுறான்.. நீ வந்து பாத்தியா நான் வவ்வாழுன்னு.. வீடியோ எடுத்து போடியா நீ? அங்கே வந்து வீட்டுல அறுத்து போட்டுருந்தேன், உன்ன சும்மா விட்டேன் பாரு..! கேஸோட கேஸ் வாங்கிட்டு உள்ள போயிருக்கணும்!" என்று ஆபாச வார்த்தைகளுடன் தாக்கினார்.

அவரது கூட்டாளியுடன் சேர்ந்து செய்தியாளரின் சிரத்தை இழுத்து, பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தனர். அங்கு இருந்த போலீஸார் "நீங்க எங்க போலீஸ் முன்னாடி இந்த மாதிரி பேசக்கூடாது, நீங்க யாரையுமே பொதுவெளியில் இப்படி மிரட்டக்கூடாது.. இது தப்பு.. நீங்க அவங்க மேல கேஸ் குடுக்கிறீங்க.. அதை விசாரிப்பாங்க.." என்று கூறினார்கள்.

ஆனால், போலீசாரையும் அவதூறாக பேசி, அவர்களையும் வார்த்தைகளால் தாக்கினார்.சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில், ஹேமலதாவின் ஆவேசம் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தை அறிந்து, பாதிக்கப்பட்ட செய்தியாளருடன் பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹேமலதாவையும் அவரது கூட்டாளியையும் கைது செய்தனர்.

"யூட்யூப்ள என்ன பத்தி ஆபாசமா போட்டுக்கறாங்க? எத்தனை குழந்தைகள் பார்க்குது? அப்ப குழந்தைகளுக்கு, பொதுமக்களுக்கும் இது ஆகாதா?" என்று மீண்டும் வசை பாட தொடங்கினார் ஹேமலதா.

செய்தியாளர் கூறியது போல, இது சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.போலீஸ் வட்டாரங்களின்படி, ஹேமலதா மீது ஏற்கனவே பிளாக்மெயில் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தச் சம்பவம், செய்தியாளர் பாதுகாப்பு மற்றும் போலீஸ் நடவடிக்கை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவம், உள்ளூர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடக்கிறது.

Summary in English : In Tiruvallur, juice shop owner Hemalatha, previously arrested for blackmail and extortion, assaulted a journalist at the SP office premises. Enraged over coverage of her case, she pulled the reporter's hair, issued public death threats, and abused police. Her accomplice joined in. Following a complaint from the journalists' association, both were arrested. The incident underscores rising concerns over media safety.