அறையில் ஆடையில்லாமல் ரகசிய வீடியோ! தொழிலதிபர் முதல் போலீஸ் வரை ஒருத்தரையும் விட்டு வைக்காத கில்லாடி பெண்!
திருவள்ளூர் மாவட்டம் ராவணன் கோவில் பிள்ளையார் தெருவைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர், தனது பள்ளி தோழரின் வீட்டிற்கு சென்றபோது அங்கு மறைந்திருந்த ஹேமலதா உள்ளிட்டோர் தன்னைத் தாக்கி, நிர்வாண வீடியோ எடுத்து நகை மற்றும் பணம் தரும்படி மிரட்டியதாகக் கூறி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் ஹேமலதா மற்றும் அவரது தோழர் ஜெயந்தன் மீது ஒன்பது பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது ஹேமலதாவின் பின்னணி மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹேமலதாவின் பின்னணி ஹேமலதா, சென்னை பேஷன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த பெண்ணரசு-கோமளா தம்பதியின் மகள். திருப்பாச்சூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர் வீட்டில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் இளங்கோவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சென்னையில் கம்ப்யூட்டர் கோச்சிங் கிளாஸ் சென்றபோது, திருச்சியைச் சேர்ந்த இளைஞர் விக்கியுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இது கணவர்...