Posts

Showing posts with the label media safety

“வவ்வாலு ஆட்டம் தாங்கலப்பா” செய்தியாளரை பகிரங்கமாக மிரட்டிய பிளாக் மெயில் ராணி.. போலீஸ் அதிரடி..!

Image
திருவள்ளூர், நவம்பர் 6: திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் செய்தியாளரை பகிரங்கமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கடம்பத்தூர் சேர்ந்த பெண் ஹேமலதா உள்ளிட்ட இருவர் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த நாட்களிலேயே செய்தியாளருக்கு தொடர் மிரட்டல் அளித்ததும், போலீஸாரை அவதூறாக பேசியதும் இவர்களின் குற்றச்சாட்டுகளாக உள்ளன. கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு எதிரே ஜூஸ் கடை நடத்தி வரும் ஹேமலதா, சில மாதங்களுக்கு முன் ஆண் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்கு சென்று நடனமாடி பணம் பறித்ததாகவும், ஒரு நண்பரின் வீட்டில் பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பிளாக்மெயில் செய்ததாகவும் வழக்கையில் சிக்கினார். கடம்பத்தூர் போலீஸார் இவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ஹேமலதா, அந்த செய்தியாளருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களிலும், மனித உரிமை ஆணையத்திலும் பொய்யான புகார்களைப் பதிவு செய்து மிரட்டல் அளித்து வந்தார். இந்நிலையில், திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் நின்றிருந்த அந்த செய்தியாளரை கண்டதும், ஹேமலதா கோபத்தில் ஆவேசமடைந்தார். "இவன் தான் என்...