தேனி, நவம்பர் 23 : ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக நர்ஸாக பணியாற்றி வந்தவர் 43 வயது பெண், தனது வீட்டின் பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்டவர் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்த செல்வி (வயது 43). இவரது கணவர் சுரேஷ் (திண்டுக்கல்). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கணவர் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் திண்டுக்கல்லில் கேட்டரிங் தொழில் செய்து வந்தார். பிள்ளைகளும் அவருடனேயே திண்டுக்கல்லில் தங்கியிருந்தனர். ஆனால், கணவன்-மமனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுகின்ற காரணத்தால் சில காலம் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.
இருவரும் பரஸ்பரம் முடிவு செய்து, செல்வி அரசு ஊழியர் வெவ்வேறு மருத்துவமனைகளில் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், மனைவி செல்வி தனியாக ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் வீடு பார்த்து தங்கியிருந்தார்.
இருப்பினும் பிள்ளைகளுக்காக அவ்வப்போது கணவருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 25-ம் தேதி செல்வியிடம் இருந்து போன் வராததால் சந்தேகமடைந்த சுரேஷ், செல்வியின் செல்போனுக்கு அழைத்துள்ளார்.
போன் சுவிட்ச் ஆஃப் என்று தெரியவே, ஆண்டிபட்டியில் உள்ள உறவினர்களிடம் “செல்வியை போய் பார்த்த்து வாருங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். உறவினர்கள் செல்வி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பூஜை அறையில் செல்வி ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

உடனடியாக சுரேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து பிள்ளைகளுடன் விரைந்து வந்த சுரேஷ், ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதமா? குடும்பப் பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மறுப்பக்கம் பிரேத பரிசோதனை வெளியானது. அதில், செல்வி உயிரிழக்கும் முன்பு உடலுறவு கொண்டிருக்கிறார் என்ற பகீர் தகவல் அதிர வைக்கிறது. செல்வியின் வீட்டை பரிசோதனை செய்ததில், வீட்டில் 500-க்கும் மேற்பட்ட ஆணுறைகள் டப்பாக்கள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த டப்பாக்களில் இருந்த பல ஆணுறைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது காவல் துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, செல்வியின் தொலைபேசி கால் ஹிஸ்டரி, வாட்சைப் சேட்டுகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.
அதில், 150க்கும் மேற்பட்ட ஆண்களுடன் காதல் ரசம் சொட்ட பேசியுள்ளார். இந்த இடத்தில் செல்வி செவிலியராக மட்டும் இல்லை இன்னும் சில சட்ட விரோதமான செயல்களை செய்து வந்திருக்கிறார் என தெரிய வந்தன.இந்நிலையில், வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2021 நவம்பர் 24-ம் தேதி ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள வாடகை வீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் ஆய்வு செய்தார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
நீண்ட விசாரணைக்குப் பிறகு சென்னை தடயவியல் ஆய்வக அறிக்கை முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. செல்வியின் வீட்டில் கிடைத்த கால் பாதத் தடயமும், விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்ட கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரபிரபுவின் கால் பாதத் தடயமும் பொருந்தியது தெரியவந்தது.மேலும் விசாரணையில் பின்வரும் உண்மைகள் வெளிப்பட்டன:
- கொலை நடந்த நாளில் செல்வியை கடைசியாக தொடர்பு கொண்ட செல்போன் எண் ராமச்சந்திரபிரபுவுடையது என்பது உறுதியானது.
- அப்பகுதி சி.சி.டி.வி. கேமராக்களில் ராமச்சந்திரபிரபு செல்வி வீட்டுக்கு சென்று வந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
- செல்வி அணிந்திருந்த 32 கிராம் (சுமார் 4 பவுன்) தங்கச் செயின் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.75 ஆயிரம் பெற்றதும், அந்த நகை செல்வியுடையதே என அவரது கணவர் சுரேஷ் உறுதி செய்தார்.
போலீசார் மேலும் தெரிவித்ததாவது:
“செல்வியும் ராமச்சந்திரபிரபுவும் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றிய போது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு ஏற்பட்டது.
அப்போது ராமச்சந்திரபிரபு லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கி செல்விக்கு கொடுத்திருக்கிறார். பணத்தை திரும்பக் கேட்டு செல்வி வீட்டுக்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் செல்வியை தாக்கி கொலை செய்திருக்கலாம்.
பின்னர் தங்க நகையை பறித்துச் சென்று அடமானம் வைத்திருக்கிறார். போலீசார் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்ததும், பிடிபட்டால் மானம் போய்விடும் என எண்ணி கடந்த 10-ம் தேதி உத்தமபாளையம் பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.”

கொலையாளி தானே தற்கொலை செய்து கொண்டதால் வழக்கு “குற்றவாளி இறந்துவிட்டார்” என முடிவுக்கு வந்துள்ளதாக தேனி மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
மக்களே, வாய்ப்பு கிடைக்கிறது என்ற காரணத்திற்காக உருவான தவறான உறவு தற்போது இருவரையும் உலகை விட்டு வெளியே அனுப்பியுள்ளது.
ஆனால்,ராமச்சந்திரபிரபுமனைவி கணவனை இழந்திருக்கிறார் அவரது குழந்தைகள் தந்தையை இழந்திருகிறார்கள். மற்றும் செல்வியின் கணவர் தன் மனைவியை இழந்துள்ளார், குழந்தைகள் தங்களுடைய தாயை இழந்துள்ளனர்.
தவறு செய்தவர்கள் நிம்மதியாக சென்றுவிட, தவறு செய்யாத குழந்தைகள் மற்றும் வாழ்க்கைதுணைகள் வாழ்நாள் வேதனையை அனுபவிக்க வேண்டிய கொடூரத்தை என்னவென்று சொல்வது.
Summary in English : In Andipatti, a 43-year-old government nurse, Selvi, living separately from her husband, was brutally murdered in her pooja room. Investigation revealed her extramarital affairs and involvement in illegal activities. Close colleague and lover Ramachandran murdered her, pawned her jewels, and later died by suicide.

