அம்மாவின் ஹேன்ட்பேக்கில் ஆணுறை.. மகள் செய்த கொடூரம்.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் திருப்பம்..

நம்முடைய தளத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களை பார்த்திருக்கிறோம். அதில் குற்றம் செய்தவர்கள் தான் தண்டனை பெற்றிருப்பார்கள். ஆனால், சில வழக்குகளில் குற்றம் செய்யாதவர்களும் தண்டிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் தற்போது குற்றம் செய்யாத இருவர் தங்களுடைய வாழ்க்கையில் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இருவரின் நலன் கருதி சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருடைய பெயரும் மாற்றப்பட்டு இருக்கிறது.

குஜராத்தை சேர்ந்த நிரவ், கரிஷ்மா இருவரும் ராஜ்கோட் பகுதியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள். அப்போது காதல் வயப்பட்டு இருவரும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பிறகு அவர்கள் வேலை செய்து வந்த மென்பொருள் நிறுவனம் அவர்களை அமெரிக்காவில் உள்ள தங்களுடைய கிளைக்கு பணிக்கு அனுப்பியது. இதற்காகத்தானே காத்திருந்தோம், என மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுடன், அமெரிக்கா பறந்து சென்றார்கள்நிரவ்மற்றும் கரிஷ்மா.

அங்கே இருவரின் காதலின் அடையாளமாக அவர்களுக்கு யஷ்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. அமெரிக்காவிலேயே வளர்ந்து படித்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கடகடவென உருண்டு ஓடின. ஆனால், யஷ்விக்கு வயது 14 ஆகும்போது நடைபெற்ற ஒரு சம்பவம் அவர்களுடைய வாழ்க்கையை நிலைகுலைய செய்து விட்டது.

ஒரு சிறு தவறு, ஒரு சிறு அஜாக்கிரதை, அவர்களுடைய ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் சுக்கு நூறாக உடைத்து விட்டது. என்ன நடந்தது..? எதனால் இவ்வளவு அழகாக, அமைதியாக, சந்தோஷமாக வசித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் சிதைந்து போனது..? என்பது பற்றி பார்க்கலாம்.

சம்பவம் நடந்த நாள் 9-ம் தேதி ஜூலை மாதம் 2025. பணி முடித்து வீடு திரும்பியநிரவ்,வீட்டில் தன்னுடைய அலமாரியின் சாவியை தேடிக் கொண்டிருந்தார். சமையல் கட்டில் இருந்து ஒரு சத்தம், உங்களுடைய சாவி தொலைந்து விட்டால் என்ன என்னுடைய ஹேண்ட் பேக்கில் இன்னொரு சாவி இருக்கிறது அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார் மனைவி கரிஷ்மா.

சரி, என்று உடனே கரிஷ்மாவின் ஹேண்ட் பேக்கில் அலமாரியின் சாவியை எடுக்க முயற்சி செய்தார்நிரவ்,அப்போது அவருடைய ஹேண்ட் பேக்கில் பயன்படுத்தப்படாத ஒரு ஜோடி ஆணுறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். இதை பார்த்ததும் மனைவி தன்னை ஏமாற்றுகிறாள் என்ற முடிவுக்கு வந்தார்நிரவ்.இதனால் இருவருக்கும் வாக்குவாதம் வெடித்தது.

என்னுடைய ஹேண்ட் பேக்கில் ஆணுறை எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அதில், ஆணுறை இருப்பது எனக்கு தெரிந்திருந்தால் நானே உங்களை சாவியை என்னுடைய ஹேண்ட் பேக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பேனா. என்று எவ்வளவோ கூறினார் கரிஷ்மா. ஆனால்,நிரவ்அதனை நம்பும் மனநிலையில் இல்லை.

மேற்கொண்டு கரிஷ்மாவை பேசவும் அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் வேறு வழியே இல்லாமல் அமெரிக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலை காரணமாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் ஒரே வீட்டில் இருந்திருக்கிறார்கள்.மகள் யஷ்வி இருவரையும் எவ்வளவு சமாதானம் செய்ய முயன்றும் பலன் இல்லை.

கடந்த மாதம் குஜராத் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்கிறார்கள். இந்த முடிவை சற்றும் எதிர்பாராத அவர்களுடைய மகள்யஷ்விதான் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த ரகசியத்தை போட்டு உடைத்தார். 14 வயதே ஆகும்யஷ்விதனக்கு பேட்ரிக் என்ற 19 வயதான ஆண் நண்பர் இருப்பதாகவும் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் ஜூலை 7-ம் தேதி அன்று என்னுடைய பள்ளி விடுமுறை தினம்.

நீங்கள் இருவரும் வேலைக்கு சென்ற பிறகு பேட்ரிக் நம்முடைய வீட்டிற்கு வந்தான். அப்போது என்னுடன் உல்லாசமாக இருக்க முயற்சி செய்தான். ஆனால், நான் அனுமதிக்கவில்லை. அவன் எவ்வளவு கேட்டும் நான் அதற்கு அனுமதிக்கவில்லை. அந்த நேரத்தில் திடீரென அம்மா வீட்டுக்கு வந்தார். பேட்ரிக் பாத்ரூமில் ஒளிந்து கொண்டான்.

அவன் கொண்டு வந்திருந்த ஆணுறை படுக்கைக்கு அருகில் இருந்த டேபிள் மீது இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அம்மா பார்ப்பதற்குள் அதனை மறைக்க வேண்டும் என்று தள்ளிவிட்டேன். அது கீழே விழுந்துவிட்டது என்று நினைத்து அமைதியாகி விட்டேன். ஆனால், அதன் பிறகு நான் எவ்வளவு தேடியும் அந்த ஆணுறை கிடைக்கவில்லை.

நான் டேபிளில் இருந்து தள்ளிவிட்டபோது அது அம்மாவின் ஹேண்ட் பேக் உள்ளே விழுந்திருக்கலாம் அதனை அம்மா கவனிக்காமல் இருந்திருக்கலாம். இந்த சம்பவம் நடந்த அடுத்த இரண்டாவது நாள் தான் நீங்கள் அம்மாவின் ஹேண்ட் பேக்கில் இருந்து ஆணுறையை எடுத்தீர்கள். இதை சொல்வதற்கு பயந்து கொண்டு நான் சொல்லாமல் இருந்தேன்.

ஆனால், நீங்கள் இப்போது விவாகரத்து வரை வந்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் பிரியக்கூடாது என நிரவ்வின் தலையில் குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் அவருடைய மகள் யஷ்வி. இதை சற்றும் எதிர்பாராத நிரவ் நிலை குலைந்தான்.

தன்னுடைய மனைவியிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால், அவருடைய மனைவி விவாகரத்து வழங்குவதில் தீர்க்கமாக இருந்தார். நீங்கள் என்னுடன் 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறீர்கள். என்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்த ஒரு ஆணுறை காரணம் காட்டி என்னுடைய நடத்தையை சந்தேகப்பட்டீர்கள். என்னை பேசவே விடவில்லை. என் தரப்பு நியாயத்தை கேட்க கூட நீங்கள் தயாராக இல்லை. கடந்த மூன்று மாதமாக என்னிடம் நீங்கள் பேசவில்லை. நான் எவ்வளவோ பேச முயற்சித்தும் நீங்கள் அதனை தவிர்த்தீர்கள். நான் ஏற்கனவே நடை பிணமான நிலையில் இருக்கிறேன். நான் தனியாக இருக்க பழகி விட்டேன். இனிமேல் உங்களுடன் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று தன்னுடைய விவாகரத்தில் தீர்க்கமாக இருக்கிறார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்த போதே அவர்களுடைய மகள் யஷ்வி இந்த விவகாரத்தை கூறியிருந்தால் ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கும். ஆனால், காலம் தாழ்த்தி தன்னுடைய மறைத்து வைத்திருந்த உண்மையை கூறிய காரணத்தினால் எந்த பலனும் இல்லை.

கணவன் மனைவி விவகாரத்தில் காலம் என்பது மிகவும் முக்கியம் நண்பர்களே. காலையில் சண்டை போட்டால் இரவில் கூடி விட வேண்டும், இரவில் சண்டை போட்டால் காலையில் கூடி விட வேண்டும், அதை விடுத்து இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் ஒரு வாரம் ஒரு மாதம் என ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தால் அந்த தனிமை ஒருவிதமான போலியான சுதந்திர உணர்வை உருவாக்கி தனியாகவே நாம் இருந்து விடலாம் என்ற எண்ணத்தை இருவருக்குள்ளும் கொடுத்து விட வாய்ப்பு இருக்கிறது.

இதுதான் கணவன் மனைவி இருவரும் பிரிவதற்கு மிகப்பெரிய காரணங்களாக இருக்கிறது. என்ன பிரச்சினையாக இருந்தாலும் ஒரு இடத்தில் அமர்ந்து தெளிவாக பேசி முடிவெடுக்கும் போது அடுத்த நல்ல நினைவுகளை நல்ல வாழ்க்கையை உருவாக்க முடியும்.

ஆனால், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்தால் அது பிரச்சினையை வலுப்படுத்துமே தவிர நீர்த்துப் போக செய்யாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையில் யார் மீது தவறு..? யார் செய்தது சரி..? என்று உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

Summary in English : Nirav and Karishma, an Indian couple in the US, face marital breakdown when Nirav finds unused condoms in her handbag, suspecting infidelity. This sparks arguments, silence, and a divorce filing after 14 years. Daughter Yashvi confesses they fell from her rejected boyfriend Patrick's bag during a secret visit. Despite Nirav's apologies, Karishma refuses reconciliation, hardened by months of isolation.