அம்மாவின் ஹேன்ட்பேக்கில் ஆணுறை.. மகள் செய்த கொடூரம்.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் திருப்பம்..
நம்முடைய தளத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களை பார்த்திருக்கிறோம். அதில் குற்றம் செய்தவர்கள் தான் தண்டனை பெற்றிருப்பார்கள். ஆனால், சில வழக்குகளில் குற்றம் செய்யாதவர்களும் தண்டிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் தற்போது குற்றம் செய்யாத இருவர் தங்களுடைய வாழ்க்கையில் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இருவரின் நலன் கருதி சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருடைய பெயரும் மாற்றப்பட்டு இருக்கிறது. குஜராத்தை சேர்ந்த நிரவ், கரிஷ்மா இருவரும் ராஜ்கோட் பகுதியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள். அப்போது காதல் வயப்பட்டு இருவரும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு அவர்கள் வேலை செய்து வந்த மென்பொருள் நிறுவனம் அவர்களை அமெரிக்காவில் உள்ள தங்களுடைய கிளைக்கு பணிக்கு அனுப்பியது. இதற்காகத்தானே காத்திருந்தோம், என மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுடன், அமெரிக்கா பறந்து சென்றார்கள்நிரவ்மற்றும் கரிஷ்மா. அங்கே இருவரின் காதலின் அடையாளமாக அவர்களுக்கு யஷ்வி என்ற பெண் குழந்தை பிற...