அந்த ஊசி போட்டதால் ரொம்ப வருத்தப்பட்டேன்.. ஸ்டாலின் பட நடிகை உடைத்த ரகசியம்!

80-களின் கனவுக் கன்னி, அழகான கண்கள் மற்றும் வசீகரமான புன்னகையுடன் ரசிகர்களை கவர்ந்த நடிகை பாக்கியலட்சுமி (பாக்யஸ்ரீ). மலையாள சினிமாவில் 'பாக்கியலட்சுமி' என்ற பெயரிலும், தமிழ்-தெலுங்கில் 'பாக்யஸ்ரீ' என்ற பெயரிலும் அறியப்பட்ட இவர், ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றவர்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி குஜராத்தில் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், தற்போது விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாக்யஸ்ரீ, தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோயின் ஆசையில் ஹார்மோன் ஊசி!

சினிமாவில் நுழைந்த ஆரம்ப நாட்களில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனக் கூறிய பாக்யஸ்ரீ, "அப்போது சிலர் சொன்னாங்க... கொஞ்சம் பூசுன மாதிரி (குண்டாக) இருந்தாதான் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கும்னு.

அதனால நான் குண்டாக ஆகணும்னு முடிவு பண்ணி, வாரத்துக்கு ஒன்று என்று 6 வாரங்களுக்கு 6 ஊசிகள் போட்டுக்கிட்டேன். டாக்டர் 'இது ரொம்ப கெடுதல், போடக்கூடாது'னு எச்சரிச்சாங்க. ஆனா நான் 'ப்ளீஸ் மேடம், எனக்கு ஹீரோயினா நடிக்கணும்'னு வற்புறுத்தி போட்டுக்கிட்டேன்.

அந்த ஊசிகளால இப்போ வரைக்கும் உடல் எடை குறைய முடியாம கஷ்டப்படுறேன். அந்தத் தப்பை செய்திருக்கக் கூடாதுனு இப்போ வருத்தப்படுறேன்!" என்று கண்ணீருடன் தெரிவித்தார். இந்த வாக்குமூலம் சினிமா உலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் உடல் அழுத்தம் மற்றும் அழகு தராதரங்கள் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் உடன் தமிழில் நடித்த பெருமை, கருணாநிதி எழுதிய படத்தில் (மு.க.ஸ்டாலினின் முதல் படம்) நடித்தது உள்ளிட்ட பல சுவாரமான நினைவுகளைப் பகிர்ந்த பாக்யஸ்ரீ, தற்போது சீரியல்களில் மீண்டும் பிஸியாகி வருகிறார். ரசிகர்கள் இவரது தைரியமான பகிர்வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Summary : 80s South Indian actress Bhagyasree (Bhagyalakshmi), famous in Malayalam, Tamil and Telugu films, revealed in a recent interview that she took 6 hormone injections to gain weight as producers demanded a "plump" look for heroine roles, despite doctors' warnings. She regrets the decision as it caused permanent weight issues.