Posts

Showing posts with the label heroine role

அந்த ஊசி போட்டதால் ரொம்ப வருத்தப்பட்டேன்.. ஸ்டாலின் பட நடிகை உடைத்த ரகசியம்!

Image
80-களின் கனவுக் கன்னி, அழகான கண்கள் மற்றும் வசீகரமான புன்னகையுடன் ரசிகர்களை கவர்ந்த நடிகை பாக்கியலட்சுமி (பாக்யஸ்ரீ). மலையாள சினிமாவில் 'பாக்கியலட்சுமி' என்ற பெயரிலும், தமிழ்-தெலுங்கில் 'பாக்யஸ்ரீ' என்ற பெயரிலும் அறியப்பட்ட இவர், ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றவர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி குஜராத்தில் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், தற்போது விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாக்யஸ்ரீ, தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹீரோயின் ஆசையில் ஹார்மோன் ஊசி! சினிமாவில் நுழைந்த ஆரம்ப நாட்களில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனக் கூறிய பாக்யஸ்ரீ, "அப்போது சிலர் சொன்னாங்க... கொஞ்சம் பூசுன மாதிரி (குண்டாக) இருந்தாதான் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கும்னு....

தனுஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டாங்க.. ஆனால்.. இன்ஸ்டா பிரபலம் கூறிய திடுக் தகவல்!

Image
சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளம் பெண்ணான கனி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷின் படத்தில் நடிக்க மறுத்ததாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் தன்னை இரண்டாவது கதாநாயகியாக (செகண்ட் ஹீரோயின்) நடிக்க அழைத்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை தான் நிராகரித்ததாகவும் கனி கூறியுள்ளார். இந்த பேட்டி சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி, ‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர். அவரது அடுத்த படமான ‘தனுஷ் 55’ படத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு முதன்மை கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இரண்டாவது கதாநாயகி வேடத்திற்கு கனியை அணுகியதாகவும், ஆனால் அவர் அதை ஏற்க மறுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கனி தனது பேட்டியில், “என்னை இரண்டாவது ஹீரோயினாக நடிக்க அழைத்தார்கள், ஆனால் நான் நடிக்க வரவில்லை என்று மறுத்துவிட்டேன்,” என திட்ட...