அந்த ஊசி போட்டதால் ரொம்ப வருத்தப்பட்டேன்.. ஸ்டாலின் பட நடிகை உடைத்த ரகசியம்!
80-களின் கனவுக் கன்னி, அழகான கண்கள் மற்றும் வசீகரமான புன்னகையுடன் ரசிகர்களை கவர்ந்த நடிகை பாக்கியலட்சுமி (பாக்யஸ்ரீ). மலையாள சினிமாவில் 'பாக்கியலட்சுமி' என்ற பெயரிலும், தமிழ்-தெலுங்கில் 'பாக்யஸ்ரீ' என்ற பெயரிலும் அறியப்பட்ட இவர், ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றவர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி குஜராத்தில் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், தற்போது விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாக்யஸ்ரீ, தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹீரோயின் ஆசையில் ஹார்மோன் ஊசி! சினிமாவில் நுழைந்த ஆரம்ப நாட்களில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனக் கூறிய பாக்யஸ்ரீ, "அப்போது சிலர் சொன்னாங்க... கொஞ்சம் பூசுன மாதிரி (குண்டாக) இருந்தாதான் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கும்னு....