முறை தவறிய உறவு.. 12-ம் வகுப்பு மாணவி பையில் ஆணுறை மற்றும் டெஸ்ட் கார்டு.. உண்மை தெரிந்தும் விடாத கொடூரன்..

கர்நாடகா, டிசம்பர் 22 : கர்நாடக மாநிலத்தில் உள்ள வையாபுரி நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சாரதி என்பவர், உறவினர் சிறுமியுடன் காதல் வலை வீசி, நெருக்கமான புகைப்படங்களை எடுத்து மிரட்டியதோடு, அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வையாபுரி நகரைச் சேர்ந்த ரமணன் என்பவரின் மகன் சாரதி (21). பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர், தள்ளுவண்டியில் பழங்களை விற்று வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட போது, அங்கு வந்திருந்த உறவினர் பெண்ணான 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், அது காதலாக மாறியது.

கடந்த செப்டம்பர் மாதம், சாரதியின் ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள சிறுமி சென்றார். பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சாரதி வீட்டுக்கு வந்த சிறுமி, அவருடன் கோயிலுக்கு சென்று திரும்பினார்.

அப்போது, "திருவிழாவுக்கு வந்து இருவரும் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை" எனக் கூறி வற்புறுத்தி, முத்தம் கொடுப்பது போலவும், நெருக்கமாக இருப்பது போலவும் செல்பி புகைப்படங்களை எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதன்பிறகு, சிறுமியின் பள்ளி பையை துவைக்கும் போது, அதில் ஆணுறை மற்றும் கர்ப்ப பரிசோதனை கிட் இருப்பதை பார்த்த தாய் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில், சிறுமி அடிக்கடி சாரதி வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. காதல் விவகாரம் தெரிந்ததும், சிறுமியின் பெற்றோர் "சாரதி உனக்கு அண்ணன் உறவு, இனி பழகுவதை நிறுத்திக்கொள்" என அறிவுறுத்தினர்.

அதன்படி சிறுமி தொடர்பை துண்டித்தார். ஆனால், சாரதி தொடர்ந்து தொல்லை கொடுத்தார். சிறுமி பள்ளிக்கு செல்லும் போது பின்தொடர்ந்து, "நீ என்னை காதலிக்கவில்லை என்றால், பழகிய போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன்" என மிரட்டினார்.

சிறுமி பதில் கூறாத நிலையில், நெருக்கமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். இதை உறவினர்கள் பார்த்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமி மேகவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், சிறுமியை வற்புறுத்தி புகைப்படம் எடுத்தது, காதலிக்க தொல்லை கொடுத்தது, அனுமதியின்றி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றியது உள்ளிட்ட குற்றங்களுக்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மகளிர் போலீசார் சாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்வதன் ஆபத்து குறித்து பெற்றோர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Summary : In Karnataka's Vijayapura, 21-year-old fruit vendor Charathi developed a relationship with a 12th-grade minor relative. He took intimate selfies, harassed her, and later blackmailed her by threatening to post the photos on Instagram. After she ended contact, he uploaded them. Police arrested him under POCSO Act.