பெங்களூரு மாநகராட்சி பகுதியான பெலத்தூரில் கடந்த 2023 ஜூலை 9 ஆம் தேதி சாக்கடை அடைப்பை சரி செய்ய வந்த தொழிலாளி கண்டெடுத்த மனித உடல், நகரையே உலுக்கிய கொடூரக் கொலையின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அந்த உடல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பான் மசாலா வியாபாரி ஓம்நாத் சிங் (வயது 48) என அடையாளம் காணப்பட்டது.
கொலைக்குப் பின்னணி: கடன், பாலியல் வன்புணர்வு, பழிக்குப்பழி
போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஓம்நாத் சிங், தனது பக்கத்து வீட்டில் வசித்த இளம் தம்பதியரான விஷால் (25) மற்றும் ரூபி (24) ஆகியோருடன் குஜராத்தில் இருந்தே நெருக்கமாக இருந்து வந்துள்ளார். பெங்களூருக்கு வந்த பிறகும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் பக்கத்து பக்கத்து வீடுகளாக வசித்து வந்தனர்.

விஷாலுக்கு ஏற்பட்ட பண நெருக்கடியில் ஓம்நாத் சிங் ரூ.3 லட்சம் வட்டிக்கு கடனாகத் தந்துள்ளார். வட்டி திரும்பச் செலுத்த முடியாத நிலையில், ஓம்நாத் சிங் நண்பன் விஷாலை தினமும் அவமானப்படுத்தி வந்தார்.
ஒரு கட்டத்தில், மது போதையில், "உன் மனைவி ரூபியை என்னிடம் அனுப்பி வைத்தால் கடனை தள்ளுபடி செய்கிறேன்” என கூறினான் ஓம் நாத் சிங். ஆனால், விஷால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மனைவியை சம்மதிக்க வைத்து மனைவி ரூபியை ஓம்நாத் சிங்குடன் அனுப்பி வைத்தான். ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு மாதம் என மூன்று லட்சம் ரூபாய்க்கு மூன்று மாதங்கள் விஷாலின் மனைவி ரூபியை வீட்டில் அடைத்து வைத்தான் ஓம்நாத் சிங்.
சும்மா இல்லை, மாசம் ஒரு லட்சம் ரூபாய். என சொல்லி சொல்லி விஷாலின் மனைவி ரூபியை தினம் தினம் உல்லாசமாக இருந்து வந்துள்ளான் ஓம்நாத். மூன்று மாதமும், ரூபி விரும்பும் சாப்பாடு, தின்பண்டங்கள் என அனைத்தையும் வாங்கி கொடுத்த ஓம் நாத்.
ஆன்லைனில் கவர்ச்சியான உடைகளை வாங்கி குவித்து, அவற்றை ரூபிக்கு அணிவித்து தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றி வந்துள்ளான். தினம் தினம், காலை, மாலை என நேரம் காலம் இல்லாமல் உறவு கொண்டதில் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் ரூபி. ஆனால், ஓம் நாத் அதை பற்றி கவலை படவில்லை. காய்ச்சலாக இருந்தாலும், அவளை விடாமல் சித்ரவதை செய்து வந்துள்ளான்.
விஷால் ஒரு நாள் மதியம் வீடு திரும்பியபோது, ஜன்னல் வழியாக தன் மனைவிக்கு மோசமான ஆடை அணிவித்து ஓம்நாத் சிங் நாசம் செய்து கொண்டிருப்பதை நேரில் பார்த்தார். இதனை பார்த்த பிறகு விஷாலுக்கு மனம் தாங்கவில்லை. அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்ட விஷால், ரூபியுடன் சேர்ந்து கொடூர திட்டம் ஒன்றை தீட்டினான்.
அதன் படி, விஷால் “வெளியூர் செல்கிறேன், 5 நாள் வரமாட்டேன்” என ஓம்நாத் சிங்கிடம் கூறிவிட்டு கிளம்பினார். அன்றிரவு, ஓம்நாத் சிங் ரூபியுடன் உல்லாசமாக இருக்க வந்த போது, திட்டமிட்ட கணவன் விஷாலுக்கு ரூபி மிஸ்டு கால் கொடுத்தார். உடனே, திடீரென வீட்டுக்குள் நுழைந்தார் விஷால். நுழைந்து கதவைப் பூட்டினார்.
உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் இருந்த ஓம்நாத் திருடனுக்கு தேள் கொட்டியது போல நிற்க, துரிதமாக செயப்பட்ட விஷாலும் ரூபியும், ஓம்நாத் சிங்கை கட்டிப்போட்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து இரும்புக் கம்பி, பெல்ட், கைலி என கிடைத்ததையெல்லாம் வைத்து கொடூரமாக அடித்து சித்திரவதை செய்தனர்.
“நீ என்னை மூன்று மாசமாக நாசம் பண்ண.. நான் உன்னை மூன்று நாள் நாசம் பண்ணுவேன்” என ரூபி கூறியதாக போலீஸ் பதிவுகளில் உள்ளது. தன்னுடைய வேதனைகளை எல்லாம் நினைத்து நினைத்து கொடூரமாக தாக்கினாள்.
மனைவி குஞ்சாதேவி கண் முன் கொலை
மூன்றாம் நாள் இரவு, ஓம்நாத் சிங்கின் மனைவியிடம் சாக்கு போக்கு சொல்லி குஞ்சாதேவியை (35) வீட்டுக்கு அழைத்து வந்தனர். தன் கணவன் ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் காட்சியைக் கண்ட குஞ்சாதேவி அதிர்ந்தார். ஓம்நாத் செய்த கொடுமைகளை செல்போனில் காட்டினான் விஷால். “நான் உன்னை இவ்வளவு நாள் உண்மையாகத்தானே பார்த்தேன்? ஒரு இளம் பெண்ணை இப்படியா செய்வது?” என ஓம் நாத்திடம் கோபப்பட்டார்.
அதன் பிறகு விஷாலும் ரூபியும் சேர்ந்து ஓம்நாத் சிங்கை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். குஞ்சாதேவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மாறாக “இவனுக்கு வேண்டிய தண்டனை தான் உங்க இஷ்டம் பண்ணிக்கோங்க” எனக் கூறியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உடல் மறைப்பு – சாக்கடையில் திணிப்பு
கொலைக்குப் பின் உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி, நள்ளிரவு 2:30 மணிக்கு விஷால் தனியாகத் தூக்கி வந்து அருகிலுள்ள மேன்ஹோலில் திணித்து மூடியை மூடினார். அதன் பிறகு மூவரும் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். பல்வேறு லாட்ஜ்களில் பதுங்கினர்.
கைது
குஞ்சாதேவியின் மொபைல் சிக்னல் மூலம் மங்களூருவில் ஒரு லாட்ஜில் மூவரும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மூவரும் முழு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தற்போதைய நிலை
விஷால், ரூபி, குஞ்சாதேவி ஆகியோர் மீது IPC பிரிவு 302 (கொலை), 120B (குற்ற சதி), 201 (ஆதாரங்களை அழித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இந்த வழக்கு சட்ட ரீதியாக தெளிவாக இருந்தாலும், சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் “பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக எடுக்கப்பட்ட பழிவாங்கல்” எனக் கருதுகின்றனர். ஆனால் சட்டம் தனது பாதையில் தண்டனையை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு விசாரணை தொடர்கிறது. அடுத்த கட்ட அப்டேட்கள் இங்கே அப்டேட் செய்யப்படும்.


