Posts

Showing posts with the label Bellandur manhole body

வாங்கிய கடனை அடைக்க நண்பனுடன் மனைவியை அனுப்பிய கணவன்.. தினமும் அவள் அனுபவித்த கொடுமை..

Image
பெங்களூரு மாநகராட்சி பகுதியான பெலத்தூரில் கடந்த 2023 ஜூலை 9 ஆம் தேதி சாக்கடை அடைப்பை சரி செய்ய வந்த தொழிலாளி கண்டெடுத்த மனித உடல், நகரையே உலுக்கிய கொடூரக் கொலையின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அந்த உடல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பான் மசாலா வியாபாரி ஓம்நாத் சிங் (வயது 48) என அடையாளம் காணப்பட்டது. கொலைக்குப் பின்னணி: கடன், பாலியல் வன்புணர்வு, பழிக்குப்பழி போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஓம்நாத் சிங், தனது பக்கத்து வீட்டில் வசித்த இளம் தம்பதியரான விஷால் (25) மற்றும் ரூபி (24) ஆகியோருடன் குஜராத்தில் இருந்தே நெருக்கமாக இருந்து வந்துள்ளார். பெங்களூருக்கு வந்த பிறகும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் பக்கத்து பக்கத்து வீடுகளாக வசித்து வந்தனர். விஷாலுக்கு ஏற்பட்ட பண நெருக்கடியில் ஓம்நாத் சிங் ரூ.3 லட்சம் வட்டிக்கு கடனாகத் தந்துள்ளார். வட்டி திரும்பச் செலுத்த முடியாத நிலையில், ஓம்நாத் சிங் நண்பன் விஷாலை தினமும் அவமானப்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில், மது போதையில், "உன் மனைவி ரூபியை என்னிடம் அனுப்பி வைத்தால் கடனை தள்ளுபடி செய்கிறேன்” என கூறினான் ...