தேவதாசி முறை இந்தியாவின், குறிப்பாக தென்னிந்தியாவின், பழமையான சம்பிரதாயங்களில் ஒன்று. "தேவதாசி" என்ற சொல்லுக்கு "கடவுளின் அடிமை" அல்லது "இறைவனுக்கு சேவை செய்பவள்" என்று பொருள்.
இந்த முறைப்படி, சிறுமிகள் கோவில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, கடவுளுக்கு "திருமணம்" செய்து வைக்கப்பட்டு, நடனம், இசை மூலம் கோவில் சேவை செய்தனர்.

இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர்: கர்நாடகாவில் "பசவின்", மகாராஷ்டிராவில் "முரளி", தமிழ்நாட்டில் "தேவரடியார்" போன்றவை.
ஆதாரங்கள் மற்றும் தோற்றம்
இந்த முறையின் தோற்றம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. சிலர் சிந்து சமவெளி நாகரிகத்துடன் (கிமு 2500) தொடர்புபடுத்துகின்றனர், மோகஞ்சதாரோவில் கிடைத்த "நடனமாடும் பெண்" சிலை போன்றவை ஆதாரமாகக் கூறப்படுகின்றன.

ஆனால் உறுதியான ஆதாரங்கள் 6-7ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. கோவில் சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகளில் தேவதாசிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பரதநாட்டியம் போன்ற கலை வடிவங்களை வளர்த்தெடுத்தனர்.
சோழர் காலத்தில் உயர்ந்த அந்தஸ்து
சோழர் காலத்தில் (9-13ஆம் நூற்றாண்டு) தேவதாசிகள் உயர்ந்த சமூக அந்தஸ்து பெற்றிருந்தனர். ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில் (பிரகதீஸ்வரர் கோவில்) சுமார் 400 தேவதாசிகள் பணியாற்றியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

அவர்களுக்கு நிலங்கள், ஊதியம், தனி வீடுகள் (தலிச்சேரி பெண்டுகள்) வழங்கப்பட்டன. கோவில் ஒப்பந்தங்களில் அவர்களின் ஒப்புதல் தேவைப்பட்டது. அரச விழாக்களில் முரசு அடித்து வரவேற்கப்பட்டனர். அவர்கள் கோவிலுக்கு மட்டுமே சேவை செய்தனர், அரசருக்கு அடிமையல்ல.
வீழ்ச்சி மற்றும் சீரழிவு

மத்திய காலத்தில், இஸ்லாமிய படையெடுப்புகள் (அலாவுதீன் கில்ஜி போன்றோர்) கோவில்களை அழித்ததனர், உருவ வழிபாடு கூடாது என கோயிலில் இருந்த கடவுள் சிலைகளை சிதைத்தனர், இதன் ஒரு பகுதியாக தேவதாசிகளின் புரவலர்கள் இழந்தனர்.
கோவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான், தேவரடியார்களாக இருந்த பெண்கள், தேவ**யாளாக மாற்றப்பட்டனர்.
விஜயநகர காலத்துக்குப் பிறகு, அவர்கள் அரசர்கள், அதிகாரிகளுக்கு சேவை செய்யத் தள்ளப்பட்டனர். பிரிட்டிஷ் காலத்தில் விக்டோரியா ராணியின் மத தலையீடு தவிர்ப்பு கொள்கை காரணமாக, இம்முறை தடுக்கப்படவில்லை. படிப்படியாக விபசாரமாக மாறியது.

ஒழிப்பு இயக்கமும் முத்துலட்சுமி ரெட்டி
20ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் இம்முறையை எதிர்த்தனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், தேவதாசி சமூகத்தைச் சேர்ந்தவர்) தீவிரமாக போராடினார்.
1927ல் மெட்ராஸ் சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தார். எதிர்ப்புகள் இருந்த போதிலும், 1947 அக்டோபர் 9ஆம் தேதி "மெட்ராஸ் தேவதாசி (தடுப்பு) சட்டம்" நிறைவேறியது. இது கோவில்களுக்கு சிறுமிகளை அர்ப்பணிப்பதை தடை செய்தது.

முத்துலட்சுமி ரெட்டியின் போராட்டம் பெண்களின் உரிமைகளுக்கு ஒரு மைல்கல். இன்று இம்முறை சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது (1988ல் அகில இந்திய தடை), ஆனால் சில இடங்களில் பொருளாதார, சமூக காரணங்களால் தொடர்கிறது.
இந்த வரலாறு ஒரு புனித சடங்கு எப்படி சமூக அடக்குமுறையாக மாறியது என்பதை காட்டுகிறது. சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் பெண்கள் பலர் விடுதலை பெற்றனர்.
Summary in English : The Devadasi system dedicated young girls to temples as divine servants through dance and music. They held high status in the Chola era but declined after invasions, turning exploitative. Dr. Muthulakshmi Reddy's efforts led to its abolition in 1947.


