“நிச்சயதார்த்த மோதிரத்தோடு.. உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல்..” விந்தணு மாதிரியால் வெளிவந்த கொடூரம்..

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஸ்வந்த் விடுதலையான அதிர்ச்சி நீங்கவதற்க்குள்ளாகவே, இப்போது கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இதன் சூத்திரதாரியாக இருந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு 15 வருஷத்துக்கு முன்பு, இதே பாதிக்கப்பட்ட நடிகையும் நடிகர் திலீபும் பிரண்ட்ஸ் மட்டும் இல்ல பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் என்றால் உங்களால் நம்ப முடியாது. தன்னுடைய 17 வயதில் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான புகழை பெற்றவர் நடிகை மஞ்சுமாரியர்.

இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் திலீப். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் மஞ்சு வாரியர். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் நடிக்க கூடாது என்று தன்னுடைய கணவர் திலீப் கூறியதன் காரணமாக சினிமா மற்றும் மீடியா வெளிச்சத்தில் இருந்து மறைந்தார்.

நாட்கள் நகர்ந்தன. ஒருமுறை அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கேரளா திரை உலக பிரபலங்கள் சென்றனர். அப்போது திரையுலகத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகர் திலீப் அந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவருடைய மனைவி மஞ்சு வாரியருக்கு அழைப்பு இல்லை.

ஏனென்றால், அவர் சினிமாவில் இருந்து வெளியே சென்று விட்டார் அவருடன் சக நடிகை காவியா மாதவன் என்பவரும் சென்றிருந்தார். மட்டுமில்லாமல் பல்வேறு கேரள சினிமா நட்சத்திரங்கள் சென்றிருந்தனர்.

சென்ற இடத்தில் நடிகர் திலீப் மற்றும் நடிகை காவியா மாதவன் இருவரும் நெருக்கமாக பழகுவதையும் ஒரு கணவன் மனைவி போல் நடந்து கொள்வதையும் தனி அறையில் தங்குவது தனியாக ஊர் சுற்றுவது என இருந்ததையும் சக நடிகைகள் பார்த்திருக்கிறார்கள்.

குறிப்பாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகை இதனை கவனித்து இருக்கிறார். அதனுடைய புகைப்படங்கள் சிலவற்றை எடுத்து தன்னுடைய தோழியான மஞ்சு வாரியருக்கு அனுப்பி இருக்கிறார். காவியா மாதவன் உன்னுடைய வாழ்க்கையில் விளையாடுகிறார். இது சரியாகப்படவில்லை என்று தன்னுடைய தோழி மஞ்சு வாரியரை எச்சரித்தார்.

மஞ்சு வாரியர் என்னுடைய மனைவி. என்னுடைய காதல் மனைவி. சினிமாவில் இருந்து அவர் வெளியே வந்து விட்டார். அவருக்கு என தற்போது எந்த ஆதரவும் இல்லை. என்னை விட்டால் அவருக்கு வேறு வழியும் இல்லை என்னை விட்டு எங்கே போய் விட போகிறார் என்ற மிதப்பில் இருந்தார் திலீப்.

ஆனால், மஞ்சு வாரியர் வேறு திட்டம் வைத்திருந்தார் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் மலையாள திரையுலகம் அவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அதிர்ந்து போனார் திலீப்.

அடுத்த சில நாட்களில் விவாகரத்து கேட்டு இருவரும் நீதிமன்றத்தில் பரஸ்பரம் மனு தாக்கல் செய்தனர். ஆறு மாதத்தில் விவாகரத்து கிடைத்தது மஞ்சு வாரியர் மீது என்னதான் கோபம் இருந்தாலும், என்னதான் காவியா மாதவனை காதலித்தாலும் கூட, மஞ்சு வாரியர் மீது அதீத காதல் கொண்டிருந்தார் திலீப்.

தன்னுடைய திருமணம் விவாகரத்தில் முடித்ததற்கு காரணம் இந்த நடிகை தான் என்றும்.. தன்னுடைய நடவடிக்கைகளை மஞ்சு வாரியரிடம் போட்டுக் கொடுத்த நடிகை மீது மிகுந்த கால்ப்புணர்ச்சியில் இருந்து இருக்கிறார் திலீப். இதனால் அவரை பழிவாங்குவது என்ற முடிவில் தூங்காமல் இருந்திருக்கிறார்.

தனக்கு தெரிந்த தொடர்புகள் மூலமாக சினிமா துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சில கூலிப்படையை சேர்ந்த நபர்களை 1.5 கோடி ரூபாய் கொடுத்து அந்த நடிகையை கடத்த சொல்லி இருக்கிறார். கடத்த சொன்னது அந்த நடிகையை மான பங்கம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தான்.

திட்டப்படி நடிகையை கடத்தினார்கள் அந்த கூலிப்படையினர். ஆனால், திட்டத்தை தாண்டி நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த நபர்களுக்கு பணம் கொடுத்த நபர் கேட்டது ஒரே விஷயம் தான், அந்த நடிகைக்கு இப்போதுதான் நிச்சயதார்த்தமாகி இருக்கிறது, அந்த நிச்சயதார்த்த மோதிரத்துடன் அவர் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் இருக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு வேண்டும் அவ்வளவுதான் என்று கேட்டு அனுப்பி இருக்கிறார்.

ஆனால், நடிகையின் ஆடைகளை கழட்டி புகைப்படம் எடுத்த பிறகு நடிகையின் அழகை பார்த்த ரசிகர்கள் இனிமேல் இது போல் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்று நடிகையை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தான் ஒரு பிரபல நடிகை, இப்படி ஒரு சம்பவம் தனக்கு நடந்தது என்று வெளியே சொன்னால் தன்னுடைய மார்க்கெட் போய்விடும், தன்னுடைய கௌரவம் பாதிக்கப்பட்டு விடும், தன்னுடைய திருமணம் என்று விடும், என்ற பயத்தில் நடிகை வெளியே சொல்ல மாட்டார் என்ற துணிச்சலில் ஓடும் காரில் மாறி மாறி அந்த நடிகையை சீரழித்தார்கள்.

ஆனால், தப்பி பிழைத்த அந்த நடிகை உடனடியாக காவல் நிலையத்திற்கு விரைந்து சென்றார். சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்தார். ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் கிடுகிடுத்து போனது.

சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், நடிகர் திலீப்புக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் இல்லை. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் திலிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு வலுவான சாட்சியங்களும் இல்லை என்று நடிகர் திலீப்பை குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் விந்தணு மாதிரியால், சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளிகள் என்ற தீர்ப்பழிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கின்றனர்.

இதில் வழக்கின் ஆரம்பத்தில் திலீப்புக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் எல்லாம் அடுத்தடுத்த வருடங்களில் திலீப்புக்கு ஆதரவாக சாட்சி சொல்ல ஆரம்பித்தனர் இன்னும் சொல்லப்போனால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நின்ற சிலர் கூட கடைசியாக நடிகைக்கு எதிராகவும் நடிகர் திலீப்புக்கு ஆதரவாகவும் சாட்சிகளை சொல்ல ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக திலீப் தற்போது சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி இருக்கிறார். இதை பற்றி உங்கள் பார்வையை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

Summary in English : In 2017, a prominent Malayalam actress was abducted and sexually assaulted in Kerala. Actor Dileep was accused of masterminding the crime as revenge after she informed his then-wife Manju Warrier about his affair. After an eight-year trial, Dileep was acquitted in December 2025 due to insufficient evidence, while six others were convicted.