நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..? புருஷன் யாருன்னு தெரியாமல் சில்மிஷம் செய்த டெலிவரி பாய் - ரிப்ளையாக வந்த விஷயம்

தஞ்சாவூர் / கும்பகோணம் : மனைவிக்கு தவறாக வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த பிரபல ரவுடி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து டெலிவரி பாயை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தில் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி சிபி சக்கரவர்த்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம், கவிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி (வயது 31). இவர் கும்பகோணம் அருகே மருதநல்லூர் பகுதியில் ஆன்லைன் நிறுவனத்துக்காக பொருட்களை டெலிவரி செய்யும் பணியில் இருந்தார்.

கடந்த 8-ம் தேதி மருதநல்லூரில் உள்ள ஒரு வீட்டுக்கு பார்சல் டெலிவரி செய்யச் சென்றார் புகழேந்தி. அந்த பார்சலை ஆர்டர் செய்தது அப்பகுதியின் பிரபல ரவுடியான சிபி சக்கரவர்த்தியின் மனைவி. 

டெலிவரி கொடுக்கும்போது அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய புகழேந்தி, அதன் பிறகு “ஹாய்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” எனத் தொடர்ந்து ஆசை வார்த்தைகள் அடங்கிய மெசேஜ்களை அனுப்பி வந்தார். போனிலும் பலமுறை அழைத்து தொல்லை கொடுத்தார்.

இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த அந்தப் பெண், விஷயத்தை கணவர் சிபி சக்கரவர்த்தியிடம் கூறினார். உடனே சிபி சக்கரவர்த்தி, மனைவியின் போனிலிருந்தே பெண் போல பதில் அளித்து, “வாங்க... பேசலாம்” எனக் கூறி புகழேந்தியை மருதநல்லூருக்கு வரவழைத்தார்.

ஆசையோடு வந்த புகழேந்திக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி!  வந்த இடத்தில் பெண் இல்லை... பதிலாக ரவுடி சிபி சக்கரவர்த்தியும் அவரது நண்பர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.

அங்கேயே புகழேந்தியை மடக்கிப் பிடித்து இரும்புக் கம்பி, மரக்கட்டை எனக் கொடூரமாகத் தாக்கினர். “இனிமே இந்த நம்பருக்கு மெசேஜோ போனோ செய்யக்கூடாது” என மிரட்டிவிட்டு அனுப்பினர். ஆனால் அடி வாங்கிய புகழேந்தி வீட்டுக்கு வந்ததும் உடல்நிலை மோசமானது. முதலில் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். புகழேந்தியின் செல்போன் சிக்னல், கால் லிஸ்ட் ஆய்வு செய்ததில் உண்மை வெளியானது. 

இதன்பேரில்,

  • - சிபி சக்கரவர்த்தி (பிரபல ரவுடி, சரித்திரப்படு குற்றவாளி)  
  • - கிருஷ்ணமூர்த்தி  
  • - சாமிநாதன்  
  • - ஹரிஹரசுதன்  
  • - குபேரன்  

ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

“மாற்றான் மனைவிக்கு தவறாக மெசேஜ் அனுப்பினால் என்ன ஆகும்” என்பதற்கு இந்தச் சம்பவம் பயங்கர எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெலிவரி செய்ய போன இடத்தில், டெலிவரி மட்டும் பார்க்காமல் சில்மிஷத்தில் ஈடுபட்டு, தற்போது மரணமடைந்து, மூன்று பேரை கொலை குற்றவாளிகளாக மாற்றிய இந்த கொடூரன் குறித்து உங்கள் கருத்தை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள். 

Summary : A 31-year-old delivery boy, Pugazhendhi, sent flirtatious messages (“You are very beautiful”) to a customer’s wife after delivering a parcel. The woman’s husband, notorious rowdy Sibi Chakravarthy, lured him by pretending to be his wife, then brutally assaulted him with four accomplices. Pugazhendhi died in hospital. Police arrested all five accused.