நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..? புருஷன் யாருன்னு தெரியாமல் சில்மிஷம் செய்த டெலிவரி பாய் - ரிப்ளையாக வந்த விஷயம்
தஞ்சாவூர் / கும்பகோணம் : மனைவிக்கு தவறாக வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த பிரபல ரவுடி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து டெலிவரி பாயை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தில் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி சிபி சக்கரவர்த்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம், கவிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி (வயது 31). இவர் கும்பகோணம் அருகே மருதநல்லூர் பகுதியில் ஆன்லைன் நிறுவனத்துக்காக பொருட்களை டெலிவரி செய்யும் பணியில் இருந்தார். கடந்த 8-ம் தேதி மருதநல்லூரில் உள்ள ஒரு வீட்டுக்கு பார்சல் டெலிவரி செய்யச் சென்றார் புகழேந்தி. அந்த பார்சலை ஆர்டர் செய்தது அப்பகுதியின் பிரபல ரவுடியான சிபி சக்கரவர்த்தியின் மனைவி. டெலிவரி கொடுக்கும்போது அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய புகழேந்தி, அதன் பிறகு “ஹாய்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” எனத் தொடர்ந்து ஆசை வார்த்தைகள் அடங்கிய மெசேஜ்களை அனுப்பி வந்தார். போனிலும் பலமுறை அழைத்து தொல்லை கொடுத்தார். இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த அந்தப் பெண், ...