மாணவன் எடுத்த கொடூர முடிவு.. ஆபாச வீடியோவால் வசமாக சிக்கிய ட்யூசன் டீச்சர்.. இறுதியில் பகீர் ட்விஸ்ட்..

பெங்களூரு / கந்தார்பூர்: காதல் விவகாரத்தில் ஏமாற்றம் அடைந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமாக இருந்த டியூஷன் ஆசிரியை ஊர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நேற்று (டிசம்பர் 19) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தார்பூரைச் சேர்ந்த 17 வயது மாணவன் வசந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி சேர்க்கைக்கு தயாராக இருந்தவர்.

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, நண்பர்களுடன் பெங்களூரு மாநிலக் கல்லூரி கலந்தாய்வுக்கு சென்று திரும்பிய பிறகு, திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அறையில் இருந்து மகன் வெளியே வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், வழியிலேயே வசந்த் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கந்தார்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் தற்கொலைக்கு பின்னணியில் இருந்த உண்மை அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

வசந்த், கந்தார்பூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தவர். அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றிய ஊர்மிளா நடத்திய டியூஷனில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார். டியூஷன் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் ஆழ்ந்த காதலாக மாறியது.

இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், பலமுறை உல்லாசமாகவும் இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஊர்மிளாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில், அவர் மாணவனுடனான உறவை துண்டித்தார்.

வசந்த் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் ஊர்மிளா பேச மறுத்துவிட்டார். இதனால் ஆழ்ந்த விரக்தியடைந்த மாணவன், தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வசந்தின் மொபைலில் ஆசிரியையுடன் தனிமையில் இருந்த போது எடுத்துக்கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்டுகளை ஆய்வு செய்ததில் இந்த உறவு உறுதியானது. இதையடுத்து, ஊர்மிளா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்-மாணவர் உறவின் எல்லைகளை மீறுவது குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.

Summary : A student in Bengaluru's Kandharapura committed wrong decision after his tuition teacher ended their three-year romantic and physical relationship due to her upcoming arranged marriage.