புலந்த்ஷஹர் மாவட்டத்தின் ஒரு சாதாரண கிராமத்தில், வாழ்க்கை அமைதியாகவும் எளிமையாகவும் சென்று கொண்டிருந்தது.
அங்கு வசித்த ராம்பால் (43) என்ற கூலித் தொழிலாளி, தன் மனைவி சுமிதா (37) உடன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஆனால் அந்த வீட்டின் பின்புறத்தில் மறைந்திருந்த ரகசியம் ஒன்று, அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறது...
முதல் ட்விஸ்ட்: தடை இல்லாத காதல்
பக்கத்து வீட்டு இளைஞன் விகாஸ் (27). அவன் சுமிதாவுடன் தீவிரமான தகாத உறவில் இருந்தான். உடலுறவு வரை செல்லாவிட்டாலும், இருவரும் இரவு பகலாக வாட்ஸ்அப் சாட்டிங், அழைப்புகள், காதல் வார்த்தைகள் என மூழ்கியிருந்தனர். ராம்பால் இதை அறிந்தபோது, வீட்டில் பெரிய சண்டை வெடித்தது. ஆனால் சுமிதா மிகவும் தைரியமாக இருந்தாள்.
ஒருநாள் விகாஸை தனியே சந்தித்த சுமிதா கூறினாள்:
"இனி ராம்பால் நமக்கு இடையூறாக இருக்கக் கூடாது. அவனை தீர்த்துக்கட்டினால்... நாம ரெண்டு பேரும் சுதந்திரமா இருக்கலாம்."விகாஸ் தயங்கினான்.
ஆனால், சுமிதா அவனுக்கு ஒரு ஆஃபர் கொடுத்தாள். இதை மட்டும் நீ செய்தால் என்னுடன் உல்லாசமாக இருக்கலாம். மேலும், உடனே, 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தாள். "இது உனக்கு புது வாழ்க்கை தரும்... நம்ம காதலுக்கு விலை இல்லை" என்று இனிமையாக சொல்லி அவனை இணக்க வைத்தாள்.
இரண்டாவது ட்விஸ்ட்: கச்சிதமான கொலை
ஒரு இரவு, ராம்பால் வீட்டுக்கு திரும்பியபோது, சுமிதா அவனுக்கு மதுபானம் கொடுத்தாள். விகாஸ் பின்னால் வந்து ராம்பாலை தாக்கி, இருவரும் சேர்ந்து அவனை முடித்து வைத்தனர். மரணத்தை இயற்கையானதாகக் காட்ட, விஷம் கொடுத்து இதயக் கோளாறு என்று காட்டினர்.
குடும்பத்தினர் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சுமிதா அழுது புலம்பி, இறுதிச் சடங்குகளை மிக அழகாக நடத்தினாள். உடல் எரிக்கப்பட்டது. எல்லாம் முடிந்தது என்று அவள் நினைத்தாள்.
மூன்றாவது ட்விஸ்ட்: புதிய போன்... பழைய ரகசியம்
பேசியபடி கணவனை எரித்த அடுத்த நாளே 2 லட்சம் ரூபாயை விகாஸ்-க்கு கொடுத்தால் சுமிதா. 2 லட்சத்தில் 70,000 ரூபாய்க்கு ஒரு லக்ஸரி ஸ்மார்ட்போன் வாங்கினான். அதில் தன் பழைய வாட்ஸ்அப்பை ரீஸ்டோர் செய்ய முயன்றான். ஆனால், தவறு செய்தான். ஒரு வாரத்துக்கு முந்தைய பேக்அப் தான் இருந்தது. விபரீதம் புரியாமல் ஒரு வாரத்துக்கு முந்தைய வாட்சப் சேட்டை ரீஸ்டோர் செய்துவிட்டான்!
அந்த ஒரு வாரத்துக்கு முந்தைய சாட்டிங்...
சுமிதாவுடனான அனைத்து காதல் உரையாடல்கள், கொலை திட்டம் பற்றிய பேச்சுகள், "2 லட்சம் கொடுகிறேன்... வேலைய முடி.. நீ என்னுடன் உல்லாசமாக இருக்கலாம்.." என்ற மெசேஜ்கள் — எல்லாமே திரும்ப வந்துவிட்டன!
விகாஸ் அதை கவனிக்கவில்லை. ஆனால், அவனுடைய மனைவி ரேகா தான் போனை எடுத்துப் பார்த்தாள். முதலில் அதிர்ச்சி... பிறகு கோபம்... இறுதியில் முடிவு.
இறுதி ட்விஸ்ட்: துரோகியின் துரோகம்
ரேகா உடனடியாக ராம்பாலின் சகோதரரிடம் சென்று அனைத்து சாட்டுகளையும் காட்டினாள். "என் கணவன் உங்க அண்ணனை கொலை செய்ய உதவியிருக்கான்... இதோ ஆதாரம்!" என்று கண்ணீருடன் கூறினாள்.
அடுத்த சில மணி நேரங்களில் காவல்துறை வந்தது. சுமிதாவும் விகாஸும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
சுமிதா கூறினாள்: "அவர் என் வாழ்க்கையை அழித்தார். நான் என் சுதந்திரத்துக்காக இதைச் செய்தேன்."
ஆனால் இன்று அவர்கள் இருவரும் சிறையில்... அவர்களின் காதல் ஒரு சிறு வாட்ஸ்அப் பேக்அப் தவறால் சிதைந்து போனது.
ஒரு சாதாரண கிராமத்தில் நடந்த இந்த கொலை, தொழில்நுட்பத்தின் ஒரு சின்ன தவறால் வெளிச்சத்துக்கு வந்தது. உண்மை எப்போதும் தானாகவே வெளியே வரும்... எவ்வளவு கச்சிதமாக மறைத்தாலும்!
இது ஒரு கற்பனை கதை அல்ல... நிஜ சம்பவம், பெயர்களை மட்டும் மாற்றியுள்ளோம். இது, தொழில்நுட்பம் மனிதர்களின் ரகசியங்களை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதற்கு ஒரு பயங்கர எச்சரிக்கை!
Summary : In a village in Bulandshahr, a woman and her younger neighbor planned to remove her husband from their lives for a peaceful future together. After the husband's natural-looking death and cremation, a phone backup error revealed their private messages. The neighbor's wife informed the family, leading to police action and arrests.

