"என்னை விடுடா.. வலிக்குது ப்ளீஸ்.." எனக்கு 3 குழந்தைகள்.. ஆடையில்லாமல் கிடைத்த உடல்.. இரண்டு மணி நேரம் சீரழித்த கொடூரன்..

பெங்களூரு: கல்கேரே ஏரி படுகையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 28 வயது வங்கதேச பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ விவரங்கள்

ஜனவரி 24, வெள்ளிக்கிழமை காலை, ராமமூர்த்தி நகரில் உள்ள கல்கேரே ஏரி படுகையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்ததை ஜாகிங் சென்றவர்கள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ராமமூர்த்தி நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். சடலத்தில் தலையில் பலத்த காயங்கள், முகத்தில் காயங்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததாக தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் நஜ்மா (28) என அடையாளம் காணப்பட்டார். அவர் கல்கேரே பகுதியில் உள்ள DSR அபார்ட்மெண்ட்ஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் வீட்டு வேலைக்காரியாக பணியாற்றி வந்தார். அவர் தனது கணவர் சுமன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ராமகிருஷ்ணா லேஅவுட், கொத்தனூர் பகுதியில் வசித்து வந்தார்.

கணவர் அளித்த தகவல்

வழக்கம்போல வியாழக்கிழமை (ஜனவரி 23) காலை வேலைக்கு சென்ற நஜ்மா மாலை வீடு திரும்பவில்லை. மதியம் தனது கணவருக்கு தொலைபேசியில் அழைத்து "அரை மணி நேரத்தில் வீடு திரும்புகிறேன்" என்று கூறியதாக தெரியவந்தது.

ஆனால் அவர் திரும்பாததால், கணவர் சுமன் இரவு வரை காத்திருந்து, வெள்ளிக்கிழமை காலை காணாமல் போனதற்கான புகாரை ராமமூர்த்தி நகர் போலீஸில் பதிவு செய்தார்.பின்னர், ஏரி படுகையில் கிடந்த சடலத்தை போலீஸார் கணவரிடம் காட்டியபோது, அது தனது மனைவி நஜ்மா தான் என உறுதிப்படுத்தினார்.

கொலை முறை

முதற்கட்ட விசாரணையில், பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. அவர் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, பின்னர் முகத்தில் பெரிய கல் (boulder) கொண்டு அடித்து கொலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சடலம் ஏரி படுகையில் ஒதுக்குப்புறமான இடத்தில் போடப்பட்டிருந்தது. இந்த இடம் அவர் பணியாற்றிய அபார்ட்மெண்ட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பாதிக்கப்பட்டவரின் பின்னணி

நஜ்மா வங்கதேசத்தை சேர்ந்தவர் எனவும், சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்து கடந்த 5-6 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அவரிடம் செல்லுபடியான பாஸ்போர்ட் அல்லது சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை. அவரது கணவர் சுமன் BBMP (பெங்களூரு மாநகராட்சி) குப்பை பிரிப்பு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

போலீஸ் நடவடிக்கை

ராமமூர்த்தி நகர் போலீஸார் Bharatiya Nyaya Sanhita (BNS) பிரிவு 63 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 103 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குற்ற இடத்தில் Forensic Science Laboratory (FSL) குழு, SOCO குழு, நாய் படை மற்றும் கிழக்கு மண்டல டிசிபி D. தேவராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடற்கூறு அறிக்கைக்காக சடலம் அவலஹள்ளி விர்கோ நகர் தனியார் மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கைது

பின்னர் விசாரணையில், தண்ணீர் டேங்கர் ஓட்டுநரான முதுகப்பா என்ற உபேந்திரா(28) நபர் குற்றவாளி என கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர். அபார்ட்மெண்ட்டிற்கு தண்ணீர் சப்ளை செய்து வந்ததால், நஜ்மாவிற்கும் அவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.

சம்பவத்தன்று, நஜ்மாவை பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டல் செய்துள்ளான் முதுகப்பா. என்னை விடுடா.. எனக்கு 3 குழந்தைகள் உள்ளது.. என எவ்வளவோ மறுத்தும் அந்த பெண்ணை தாக்கி ஏரியின் புதர் நிறைந்த பகுதிக்கு இழுத்துச் சென்று ஆடைகளை களைந்து வலிக்குது.. விட்டுவிடு என பல முறை கெஞ்சியும்.. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததேன் என முதுகப்பா வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீஸார் கூறினர்.

இச்சம்பவம் குறித்து ஆழமான விசாரணை நடைபெற்று வருகிறது. CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது போன்ற கொடூரமான குற்றத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் பிழைக்க வழி தெரியாமல், இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து வீட்டு வேலைகளை செய்து வாழ்ந்து வந்த நஜ்மா ஒரு கொடூரனின் கோர பசிக்கு இரையான சம்பவம் பெங்களூரு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Summary : A 28-year-old woman working as a domestic helper in Ramamurthy Nagar, Bengaluru, was found deceased on the Kalkere Lake bed on January 24. She had gone to work at DSR Apartments the previous day but did not return home. Police have registered a case and an individual has been arrested in connection with the incident.