"என்னை விடுடா.. வலிக்குது ப்ளீஸ்.." எனக்கு 3 குழந்தைகள்.. ஆடையில்லாமல் கிடைத்த உடல்.. இரண்டு மணி நேரம் சீரழித்த கொடூரன்..
பெங்களூரு: கல்கேரே ஏரி படுகையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 28 வயது வங்கதேச பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ விவரங்கள் ஜனவரி 24, வெள்ளிக்கிழமை காலை, ராமமூர்த்தி நகரில் உள்ள கல்கேரே ஏரி படுகையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்ததை ஜாகிங் சென்றவர்கள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ராமமூர்த்தி நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். சடலத்தில் தலையில் பலத்த காயங்கள், முகத்தில் காயங்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததாக தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் நஜ்மா (28) என அடையாளம் காணப்பட்டார். அவர் கல்கேரே பகுதியில் உள்ள DSR அபார்ட்மெண்ட்ஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் வீட்டு வேலைக்காரியாக பணியாற்றி வந்தார். அவர் தனது கணவர் சுமன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ராமகிருஷ்ணா லேஅவுட், கொத்தனூர் பகுதியில் வசித்து வந்தார். கணவர் அளித்த தகவல் வழக்கம்போல வியாழக்கிழமை (ஜனவரி 23) காலை வேலைக்கு சென்ற நஜ்மா மாலை வீடு திரும்பவில்லை. மதியம் தனது கணவருக்கு தொலைபேசியில் அழைத்து...