நண்பர்களே, இது நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. விசாரணையின் பாதை பாதிக்கப்படாமல் இருக்கவும், தவறு செய்தவர்கள் தப்பிவிடாமல் இருக்கவும் பெயர்கள் மற்றும் சில விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசத்தின் ஒரு சிறிய கல்லூரி நகரம். இறுதியாண்டு மாணவிகள் ஆறு பேர் — காமினி, ஸ்வரா, நீலிமா, ரிதி, பூஜா, மற்றும் தன்யா. எல்லோரும் ஒரே ஹாஸ்டலில். ஒரே கனவு. ஒரே ரகசியம்.

"கல்லூரி முடியறதுக்கு முன்னாடி... ஒரு தடவையாவது... ஒரு ஆணுடன் அனைவரும் சேர்ந்து உல்லாசமாக இருக்கணும்.. எல்லாரும் சேர்ந்து..."ஆரம்பத்தில், இந்த பேச்சு விளையாட்டாக ஆரம்பித்தது. பிறகு சவாலாக மாறியது. கடைசியில்... ஒரு ஒப்பந்தமாக மாறியது.
காமினி தான் திட்டத்தின் மையம். அவளுக்கு இரண்டு காதலர்கள். ஒருவன் — ராகுல். உடல் வலிமை, தைரியம், கொஞ்சம் கெட்ட பழக்கங்கள். அவனைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால்... அவன் "இதற்கு ஒப்புக்கொள்வான்" என்று காமினி உறுதியாக நம்பினாள்.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரீமியம் சூட். ராகுல் முதலில் கோபப்பட்டான். "இது பைத்தியக்காரத்தனம்!" என்றான். ஆனால் காமினியின் பேச்சு, ஏக்கம், வாக்குறுதிகள், "இது ஒரு முறை மட்டும்... பிறகு நம்ம வாழ்க்கை நம்முடையது" என்று சொன்னாள். ஒரு வாரப் போராட்டத்துக்குப் பிறகு... அவன் ஒப்புக்கொண்டான்.

அந்த இரவு.மது. புகை. சிரிப்பு. ஆறு பெண்கள். ஒரு ஆண். எல்லாம் திட்டம்போல நடந்தது. ராகுல் சிரித்தான். "நீங்க எல்லாரும் எப்படி இந்த மாதிரி யோசிச்சீங்க.. விசித்திரமாக!" என்றான். ஆனால் அவன் கண்களில் ஒரு விசித்திரமான பிரகாசம் இருந்தது.
காலை 6 மணி.
எல்லாரும் எழுந்தபோது... ராகுல் மயங்கி கிடந்தான்.துடிப்பு இல்லை. உடல் குளிர்ந்தது. வாயில் எச்சில். கண்கள் திறந்த நிலையில்.
பதறிப்போனார்கள்."என்னடி இது?!""நேத்து ரொம்ப மது குடிச்சானா?""இல்ல... இது... overdose இல்ல?"
அவர்கள் செய்த முதல் தவறு — ஆதாரங்களை அழித்தார்கள். மது பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் எல்லாம் குப்பைத்தொட்டியில். CCTV-யில் பதிவானது.

பிறகு... இரண்டாவது தவறு.
சடலத்தை எரிக்க முடிவு செய்தார்கள். ஹோட்டலின் பின்புற ஜன்னல் வழியாக எடுத்துச் சென்றார்கள். அங்கே ஒரு ஸ்டாஃப் — ராஜேஷ் (28). இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டான். ஏணி வைத்து சடலத்தை கீழே இறக்கி, காட்டுப்பகுதிக்கு அருகே வைத்தான்.
ஆறு பெண்களும் காரில் சடலத்தை ஏற்றி, காட்டுக்குள் மூன்று கிலோமீட்டர் எடுத்து சென்று, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்கள். மழை பெய்தது. சடலம் முழுதாக எரியவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து... துர்நாற்றம். மாடு மேய்ப்பவர்கள். போலீஸ். CCTV. ரத்தக்கறை. விசாரணை. கைது.
முதல் ட்விஸ்ட்
விசாரணையில் தெரிந்தது — ராகுல் ஆறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் இறக்கவில்லை.அவனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. ஆனால்... அன்று இரவு அவன் மருந்து சாப்பிடவில்லை. ஏன்..?
இரண்டாவது ட்விஸ்ட்
ராஜேஷ் (ஸ்டாஃப்) போலீஸிடம் சொன்னான்:"அவங்க சடலத்தை எடுத்துப் போகும்போது... அந்த பையன்... கொஞ்சம் அசைஞ்ச மாதிரி இருந்துச்சு... நான் பார்த்தேன். ஆனா பயந்துட்டேன். சொல்லல."
மூன்றாவது ட்விஸ்ட் — (இது மிகப் பெரியது)
அவர்கள் தீ வைக்கும்போது, ராகுல் உயிரோடு தான் இருந்தான்.ஆனால் மயக்கத்தில் இருந்திருக்கிரான். மழை பெய்ததால் தீ அணைந்தது. ஆனால், மயக்கத்தில் எதுவும் செய்ய முடியாமல், அவன் வலியால், புகையாலும், மெதுவாக இறந்திருக்கிறான். பிரேத பரிசோதனையும் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டதை உறுதிபடுத்தியது.
அதாவது... அவர்கள் ஆறு பேரும் சேர்ந்து உயிரோடு இருக்கும் ஒருவரை எரித்தார்கள்.
நான்காவது ட்விஸ்ட் — காமினியிடம் போலீஸ் கேட்டது:
"நீங்க எல்லாரும் சேர்ந்து இதை திட்டமிட்டீங்களா?"
காமினி அழுதபடி சொன்னாள்:"இல்ல... நானும்,ஸ்வராவும் தான் திட்டமிட்டேன். மத்தவங்க... வெறும் விளையாட்டுன்னு நினைச்சு எங்க கூட சேந்துகிட்டாங்க.. ஆனா நான் மட்டும் தான் ராகுலை கொல்லணும்னு தான் விரும்பினேன்."
ஐந்தாவது ட்விஸ்ட் (கிளைமாக்ஸ்) :
ராகுல் காமினியை பிளாக்மெயில் செய்து வந்திருந்தான்.அவளுடைய பழைய அந்தரங்க வீடியோக்களை வைத்து. "நீ என்னோட நண்பர்களுடனும், ஒன்னா இருக்கணும்.. நான் சொல்ற ஆளுங்க கூடவும் ஒன்னா இருக்கணும்.. இல்லனா உன் வீடியோ எல்லாத்தையும் காலேஜ்ல அனுப்புவேன்" என்றான்.
அவன் என்னை காதலித்து ஏமாற்றி, ஒரு விலைமாதுவாக மாற்ற முயற்சி செய்தான்.. அதனால்தான் இந்த திட்டத்தை போட்டேன். எல்லாரும் தூங்குன பிறகு அவனோட கழுத்தை நெறிச்சு கொலை பண்ணேன்.. ஐந்து போரையும் பயமுறுத்தி அவனோட உடலை கரெக்டா அப்புறப்படுத்தினேன்.. மற்ற ஐந்து பேரும்... வெறும் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்களுக்கு, இந்த உண்மை தெரியவே தெரியாது.
ஆறாவது & இறுதி ட்விஸ்ட்
கோர்ட்டில் தண்டனை வழங்கப்பட்டபோது... காமினி சிரித்தாள்."நான் தான் ஜெயிச்சேன். அவன் இனி யாரையும் பிளாக்மெயில் பண்ண முடியாது. என் தோழிகள்... என்னால் வெறும் பாதிக்கப்பட்டவங்க. அவங்களுக்கு ரெண்டு வருஷம் ஜெயில். எனக்கு கஷ்டமா இருக்கு..
ஆனா, எனக்கு... ஆயுள் தண்டனை.. இதனால், நான் சந்தோஷமா இருக்கேன்.. அதுவும், நாங்க அவனை எரிக்கும் போது அவன் உயிரோட தான் இருந்தான்ன்னு சொல்லுறாங்க.. அது எனக்கு இன்னும் மகிழ்ச்சி.. என சிரித்த காமினி.. என் தோழிகள் கிட்ட நான் மன்னிப்பு கேட்டுகிறேன்.." என்று கூறினாள்.
கதை முடிந்தது.ஆனால் கேள்விகள் மட்டும் மீதமிருந்தது —உண்மையில் யார் கொலை செய்தது?திட்டமிட்டவள்... செயல்படுத்தியவர்கள்... அல்லது... அந்த ஒரு இரவு, எல்லாரையும் மாற்றிய அந்த ஆசைவேறா?
Summary : Six final-year college friends planned a shared intimate evening with one male student in a hotel room. The next morning, he was found unresponsive. In panic, they attempted to conceal the incident by moving and burning the body in a forest, but it was later discovered, leading to their arrest and ongoing investigation.

