இரண்டாம் திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட சீரியல் நடிகை! கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

தமிழ் தொலைக்காட்சி உலகில் 'நாதஸ்வரம்', 'பாரதி கண்ணம்மா', 'வாணி ராணி', 'கல்யாண பரிசு' போன்ற பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஸ்ருதி சண்முகபிரியா, தனது கணவர் அரவிந்த் அவர்களைத் திடீரென இழந்து துக்கத்தில் ஆழ்ந்தார்.

திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் (2023 ஆகஸ்ட்) அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல மாதங்கள் பொது இடங்களில் தோன்றாமல் இருந்த ஸ்ருதி, சமீபத்தில் ரெட்நூல் (Rednool) யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

பேட்டியில், பலரும் அடிக்கடி கேட்கும் ஒரு பெரிய கேள்வியை நேரடியாக எழுப்பினர்: "எல்லாருக்கும் இருக்கும் ஒரு பெரிய டவுட்... நீங்க செகண்ட் மேரேஜ் பண்ணிப்பீங்களா? உங்க கணவர் அரவிந்த்துடன் இவ்வளவு தூரம் கனெக்டடா இருக்கிற ஒரு பர்சன் எப்படி அடுத்ததைப் பத்தி யோசிப்பாங்க? அப்படின்றதுதான் உங்க மைண்ட்ல என்ன ஓடிட்டு இருக்கு?"

இந்தக் கேள்விக்கு ஸ்ருதி மிகவும் தெளிவாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிலளித்தார். அவர் கூறியதாவது:

"இந்த கேள்வி ரொம்ப சென்சிடிவான டாபிக், ஆனாலும், இதுக்கு பதில் கொடுக்க நான் விரும்புறேன். என் மனசுல இருக்கறத நான் உடைக்கிறேன். இப்போ, இந்த இடத்துல தனிமையில இருக்கிறேன்.

என்னை போல தனிமையில் இருப்பவர்களுக்கு, ஒரு கம்பேனியன்ஷிப் தேவைப்படும். ஆனா எனக்கு சப்போர்ட்டிவ் பேரண்ட்ஸ் இருக்கறாங்க, மாமனார் மாமியார் சப்போர்ட்டிவ்வா இருக்கறாங்க. அண்ட் மைண்ட் வந்து கொஞ்சம் தெளிவா இருக்கு.

நான் என்னோட ஸ்டேபிலா இருக்கேன். எனக்கு பணக்கஷ்டம் இல்ல, நான் வேலை செய்கிறேன். இதெல்லாமே எனக்கு அமைஞ்சு வந்துருக்கு. இல்ல நான் இத கிரியேட் பண்ணிக்கிட்டேன். எனக்கு என்ன வேணும் என் லைப் அப்படி இருக்குங்க நான் அமைச்சிக்கிட்டேன்.

அதனால இப்போதைக்கு எனக்கு ஒரு பெரிய கம்பேனியன்ஷிப் வேணும் அப்படிங்கறது இப்ப தேவைப்படல. ஒருவேளை எதிர்காலத்தில் தேவைப்படலாம், ஆனா, இப்போதைக்கு எனக்கு ஒரு கம்பேனியன் தேவைப்படல."

இந்த பதிலில் ஸ்ருதி தனது தற்போதைய மனநிலையை தெளிவாக வெளிப்படுத்தினார். அவர் தனது வாழ்க்கையை தானே உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும், தற்போது கம்பேனியன்ஷிப் (துணையோடு இருப்பது) தேவையில்லை என்றும் கூறினார். அவருக்கு பெற்றோர், மாமனார் மாமியார் ஆகியோரின் ஆதரவு இருப்பதால் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஸ்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு கடினமான சூழலில் இருக்கும் ஸ்ருதி, நேர்த்தியாக கொடுத்த இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அவருடைய மனவலிமையை பாராட்டி வருகின்றனர். மேலும், இவரது இந்த பேச்சு  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஸ்ருதி தனது துயரத்தை வெளிப்படையாக பகிர்ந்து, தனது முடிவுகளை தானே எடுப்பதாகக் கூறியது பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது. அவர் தற்போது நடிப்புத் துறையில் மீண்டும் சுறுசுறுப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

English Summary : Serial actress Shruti Shanmugapriya, who lost her husband Aravind, shared in a Rednool YouTube interview that she currently does not feel the need for companionship or a second marriage. With supportive parents, in-laws, mental clarity, and financial stability, she feels content and stable in her present life. She may consider it in the future.