“பின்னாடி வேண்டாம்.. என்னால முடியல..” முரண்டு பிடித்த இன்ஸ்டா காதலி.. காதலன் செய்த கொடூரம்! ஏற்காடு காட்டேஜில் கண்றாவி!

ஏற்காடு மலையின் அடர்ந்த பசுமையில் மறைந்திருந்த ஒரு சிறிய காட்டேஜ்... அங்கு ஒரு அறையில் இருந்து லேசாகத் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. முதலில் யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால், அடுத்த அறையில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் முகத்தை சுளித்து ஊழியர்களிடம் சொன்னார்கள்.

"ஏதோ நாத்தம் அடிக்குது... குமட்டுது.. ரூம்ல இருக்கவே முடியல.. ரொம்ப கெட்ட வாடை! என்னன்னு கொஞ்சம் பாருங்களே.."

ஊழியர்கள் வந்து பார்த்தபோது, அந்த அறை வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தது. ரிசப்ஷனில் இருந்து ஸ்பேர் சாவியை எடுத்து திறந்தார்கள். கதவு திறந்த உடனே அவர்களுக்கு அதிர்ச்சி!

அறைக்குள் அரை நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் சடலம் தரையில் விழுந்து கிடந்தது. கழுத்தில் நெரிப்பு அடையாளங்கள்... முகம் உப்பி வீங்கியிருந்தது. உடனடியாக போலீஸுக்கு தகவல் போனது.

போலீஸ் வந்து சடலத்தை மீட்டு, போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பினார்கள். அறையில் கிடந்த ஹேண்ட்பேக்கை சோதித்தபோது, பெண்ணின் பெயர் தெரிந்தது — சாலா (33), தர்மபுரி மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த ராமராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் மனைவி. இரண்டு குழந்தைகளின் தாய்.

காட்டேஜ் ஊழியர்கள் சொன்னார்கள் — "அவங்களோடு ஒரு 35 வயது ஆண் வந்திருந்தான். ரூம் புக் பண்ணினப்போ ஆதார் கார்ட் கொடுத்திருந்தான்."

அந்த ஆதார் விவரங்கள் மூலம் போலீஸ் விரைவாக கண்டுபிடித்தது — ஆணின் பெயர் பார்த்திபன் (35), சேலம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவன்.

விசாரணையில் தெரிந்த உண்மை மிகக் கொடூரமானது...

சாலா வீட்டில் இருந்தபோது, கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் இன்ஸ்டாகிராமில் மூழ்கியிருந்தாள். அங்குதான் பார்த்திபனை சந்தித்தாள். அவன் சோஷியல் மீடியாவில் ரொம்ப ஆக்டிவ் — போட்டோக்கள், வீடியோக்கள் என எப்போதும் பதிவிடுபவன்.

சாட்டிங் ஆரம்பமானது... சாதாரண அறிமுகம்... பின் மணிக்கணக்கில் நீண்டது... போன் நம்பர்கள் பரிமாறிக்கொண்டார்கள்... பின் வீட்டு முகவரி கூட!

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக தகாத உறவில் உல்லாசமாக இருந்து வந்தனர். கணவர் இல்லாத நேரங்களில் பார்த்திபன் சாலாவை சந்தித்து உல்லாசமாக இருப்பான். வீட்டில் பல்வேறு காரணங்களை கூறி, பார்த்திபனுடன் பல இடங்களுக்கு தனிமையில் சென்று கள்ளக்காதலை ஊட்டி வளர்த்து வந்தனர்.

கடந்த ஜனவரி 12, 2026 அன்று மாலை 5 மணியளவில், வழக்கம்போல தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்திபன் சாலாவை ஏற்காட்டில் உள்ள ஒரு சிறிய காட்டேஜுக்கு அழைத்துச் சென்றான்.

ஆனால் அன்று... எல்லாம் தலைகீழானது.

பார்த்திபன் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுக, சிறுக சாலாவுக்கு பணம் கொடுத்து வந்திருந்தான். கூட்டி கழித்து பார்த்தால் மொத்தமாக சுமார் 7 லட்சம் ரூபாய் வரை சாலாவுக்கு கொடுத்துள்ளான். இப்போது அவனுக்கு பணத் தேவை ஏற்பட்டது.

பின்னால் வேண்டாம்.. என்னால முடியல..

"நான் கொடுத்த பணத்தை திருப்பித் தா" என்று கேட்டான்.

பணம் கொடுக்கும் போதெல்லாம் பின்னால் கொடுக்க வேண்டாம் என்று தானே சொல்லி கொடுத்தாய். இப்போது, திருப்பி கேட்கிறாயே.. என்று சாலா கடுமையாக மறுத்தாள். "நானும் எவ்வளவோ முயற்சி பண்ணேன்.. என்னால் முடியல.." என்று காரமாகப் பதிலளித்தாள்.

ஆத்திரம் தலைக்கேறியது.

"நான் கொடுத்ததை எனக்கே தரமாட்டியா? எனக்கு அர்ஜென்ட்டா வேணும்.." என்று கத்தியபடி, அவளது கழுத்தை இரு கைகளாலும் பிடித்து நெரித்தான். துடிதுடித்த சாலா தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்தாள். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவளுடைய கைகள் போராடுவதை நிறுத்தியது. ஆம், உயிரிழந்தாள்.

பார்த்திபன் பதறிப்போய், அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, ஒன்றும் நடக்காதது போல அறையை காலி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினான். சேலத்தில் தனது வீட்டில் பதுங்கினான்.

ஆனால், போலீஸ் செல்போன் நம்பர் மூலம் அவனை விரைவாகக் கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் எல்லா உண்மையும் வெளிவந்தது.

பார்த்திபன் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான்.

இந்தக் கொலை... ஒரு சாதாரண கள்ளக்காதல் இல்லை.

பண ஆசை, உறவின் ஆழம், பின் வெறி... எல்லாம் கலந்து ஒரு உயிரைப் பறித்தது. கள்ளக்காதல், திருட்டு உறவு எல்லாம் ஆரம்பத்தில் குதுகலமாக தான் இருக்கும். ஆனால், பின்னாளில் பெரிய பிரச்சனையை இழுத்துவிட்டு வாழ்கையை நரமாக்கிவிடும் என்பதை இது போன்ற பல சம்பவங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும், காமம் என்ற சிறு இன்பத்திற்காக குடும்பம், குழந்தைகள் என்ற பேரின்பத்தை இழக்கும் நபர்கள் திருந்துவதாக தெரியவில்லை. 

தகாத உறவுகள் வாழ்க்கையைத் தடமாற்றும் என்பதற்கு இது மற்றொரு கொடூர உதாரணம்.

ஏற்காட்டின் அழகான மலைகளுக்கு நடுவே... ஒரு காதல் முடிந்தது. ஆனால், அது கொலையாக மாறியது.

இனி யாராவது இதை நினைத்துப் பார்த்தால்... குளிர்ந்த காற்றோடு, ஒரு துர்நாற்றமும் நினைவுக்கு வரலாம்.

Summary : A woman named Sala from Dharmapuri was found deceased in a cottage room in Yercaud. She had been staying there with Parthiban from Salem. Investigation revealed a long-term personal relationship between them. A dispute over money led to the incident, after which Parthiban was arrested.