கல்லூரி பெண்ணின் லீலைகள்! தினமும் ஒருவருடன்! பெங்களூரு சென்றதும் மாறிய நடத்தை!

சாரதா, திருநெல்வேலி மாவட்டம் ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவள். 12-ஆம் வகுப்பில் 98% மதிப்பெண்கள், மெரிட் ஸ்காலர்ஷிப், பெங்களூரில் உள்ள ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் CSE சேர்ந்தாள்.

அப்பா ராமசாமி பெருமையுடன் ஊரில் சொல்வார்: "எங்க பொண்ணு டாக்டர் ஆகல, ஆனா இன்ஜினியராவது ஆகும். அதுவும் பெங்களூர்ல!"

முதல் வருடம் எல்லாம் நல்லா போச்சு. ஹாஸ்டலில் தங்கி, லைப்ரரி, கிளாஸ், ஸ்டடி க்ரூப். ஆனா இரண்டாம் வருடம் ரூம்மேட் ப்ரியா வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா மாற்றம்.

ப்ரியா: "சாரதா, இவ்ளோ டயர்டா இருக்காத... லைஃப் என்ஜாய் பண்ணனும்.. நாம இப்போ என்ஜாய் பண்ணிகிட்டா தான் உண்டு.. காலேஜ் முடிஞ்சா கல்யாணம், குழந்தைங்கன்னு ஆயிரத்தெட்டு கடமை இருக்கு.. சோ என்ஜாய் பண்ணு.."

நான் சொல்ற ஒரு பார்ட்டிக்கு போயிட்டு வா... எல்லாம் ஃப்ரீ, பெரிய ஆளுங்க கூட பழகலாம்."

முதல் பார்ட்டி ஒரு 5-நட்சத்திர ஹோட்டல் ரூஃப்-டாப். டிரிங்க்ஸ், டான்ஸ், பளிச்சென்ற லைட்ஸ். ராகுல் (மூணாம் வருட சீனியர்) அறிமுகப்படுத்தினான்.


"சாரதா, நீ ரொம்ப ஸ்மார்ட்டா, அழகா இருக்க.. ஒரு மாடலிங் ஆஃபர் இருக்கு. சின்ன ஷூட் தான், அட்டெண்ட் பண்ணாலே. 25,000 கொடுப்பாங்க. ட்ரை பண்றியா?" என்றான். ஆனால், சாரதா திட்ட வட்டமாக மறுத்தாள்.

ஆனால், அடுத்த வாரம் ராகுல் மறுபடியும் அழைத்தான். இந்த முறை பார்ட்டியில் ஒரு "பெரிய" ப்ரொட்யூசர் வந்தார்.

அவர் சொன்னார்: "உன்னோட முகம் கேமராவுக்கு நல்லா இருக்கும். ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணலாம். பணம் + கான்டாக்ட்ஸ்." லைஃப் ஃபுல்லா நீ கஷ்டப்பட்டு சம்பாதிக்குற பணத்தை இங்க ரெண்டே வருஷத்துல எடுத்துடலாம்.. லைஃப் உன்னோடது.. குடும்பம், அம்மா, அப்பா எல்லாருமே நீ சம்பாதிக்குறத விரும்புவாங்க.. ஜஸ்ட் திங்க் அபௌட் இட்.."

மெல்ல மெல்ல சாரதா இழுக்கப்பட்டாள். முதலில் சின்ன ஷூட்டிங்ஸ், பிறகு "பிரைவேட் பார்ட்டிகள்". கட்டு கட்டாக சாராதாவின் கையில் பணத்தை திணித்தார்கள். வெளிநாட்டு பிராண்டட் பரிசுகள், வாட்ச்கள், ஹேன்ட் பேக், அழகு சாதனா பொருட்கள் எல்லாமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஒவ்வொன்றின் விலை இந்திய மதிப்பில் லட்சங்களை தாண்டும்.

பணம் அதிகமானது. செலவு செய்தது போக, மாதா மாதம், வீட்டுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் அனுப்ப ஆரம்பித்தாள்.

அம்மா லட்சுமி பெருமையுடன் சொன்னாள்:"நம்ம பொண்ணு படிக்கும் போதே நல்லா சம்பாதிக்குது.. தெய்வமே எங்க குடும்பத்தை கரை சேத்துட்டப்பா.. என் பொண்ணுக்கு எந்த குறையும் இல்லாம பாத்துக்கோ!" என்று தலையை உயர்த்தி வேண்டினாள் லட்சுமி அம்மா.

முதல் ட்விஸ்ட்:

சாரதா உண்மையில் "பிசினஸ்" செய்தாள். ஆனா, அவள் நினைத்தது போல் "சுதந்திரமா" இல்லை. ராகுலும், அவனுக்கு மேல உள்ள விக்ரமும் இவளுடைய முதலாளிகள்..

சாரதா, தன்னை போன்ற பெண்களுக்கு ஆசை வார்த்தை கூறி, தன்னுடைய சொகுசு வாழ்க்கையை காட்டி, அவர்களை மூளைச்சலவை செய்து பார்ட்டிக்கு அழைத்து சென்று லட்சங்களில் கமிஷன் பார்த்து வந்தாள்.

சில பார்ட்டிகளில் ரகசிய கேமராக்கள். விக்ரம் பெரிய கிளையண்ட்களுக்கு "எக்ஸ்க்ளூசிவ்" சர்வீஸ் கொடுப்பவர்.

இரண்டாவது ட்விஸ்ட்:

ஒருமுறை, சாரதா தன்னை விட இளைய ப்ரியாவை கூட அழைத்துச் செல்ல ஆரம்பித்தாள். "ப்ரியா, இதான் இப்போ லைஃப்... இதுதான் ட்ரெண்ட்.. பெரிய ஆளுங்க கூட பேசினா ஆபர்ச்சூனிட்டி வரும்" என்று சொல்லி... ப்ரியாவையும் தொழிலில் இறக்கி விட ஆரம்பித்தாள்.

(இதுதான் மிகப் பெரிய வலி – பாதிக்கப்பட்டவளே.. பிறரையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் நபராக மாறுவது.. பணமும், சொகுசு வாழ்க்கையும் கண்ணை மறைக்குது)

மூன்றாவது ட்விஸ்ட்:

ஒரு பார்ட்டியில் விக்ரம் சாரதாவிடம் சொன்னான்: "நீ இனிமே எங்க அபார்ட்மென்ட்லயே தங்கு... ஹாஸ்டல் வேண்டாம். இங்க எல்லாமே ஃபுல் சேஃப்டி."

ஆனால், விக்ரம் சொன்ன அந்த அபார்ட்மென்ட்டில் கேமராக்கள் இருந்தன. சில முக்கிய கிளையண்ட்களின் வீடியோக்கள் எடுக்கப்பட்டன. பின்னர் அவர்களை பிளாக்மெயில் செய்ய.

கிளைமாக்ஸ் ட்விஸ்ட்:

ஊரில் உறவினர்களுக்கு சந்தேகம், குறிப்பாக சாரதாவின் அக்கா தீபாவுக்கு, ஒரு முறை,அவள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களை பார்த்த தீபா, அதனுடைய விலையை என்ன என்பதை ஆன்லைனில் தேடித்பார்த்து அதிர்ந்து போனாள்.

என்ன தான் பகுதி நேர வேலையாக இருந்தாலும் மாதம் ஐந்து லட்சம் சம்பளம் எல்லாம் வாய்ப்பே இல்லை. தங்கை வேறு ஏதாவது செய்கிறாளா..? சுடிதார், வழித்து சீவிய கூந்தல், ஒற்றை ஜடை என அடக்க ஒடுக்கமாக இருந்த பெண், தற்போது, சினிமா ஹீரோயின் போல உடை உடுத்துகிறாள்.

அவள் பயன்படுத்தும் பொருட்களின் விலை எதுவும் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இல்லை, தீபாவின் மனதில் பயம் தொற்றியது. ஆனால், ஒருவேளை தங்கை நிஜமாவே நல்ல நிறுவனத்தில் வேலையில் இருந்தால், பெங்களூருவில் இவ்வளவு சம்பளம் என்பது சகஜம் தானே என்ற நெருடலும் இருந்தது.

இதனால், தன்னுடைய நண்பரான தனியார் துப்பறியும் நிபுணர் அனுராக்கை அணுகினார். அனுராக் 25 நாட்களில் உண்மையை கண்டுபிடித்தான். ஆனா இங்கேதான் பெரிய ட்விஸ்ட் – சாரதா, விருப்பப்பட்டு இதனை செய்யவில்லை. உண்மையில் விக்ரமால் பிளாக்மெயில் செய்யப்பட்டிருந்தாள். சாராதாவின் குடுமி விக்ரமின் கையில் இருந்தது.

முதல் பார்ட்டியிலேயே அவளது வீடியோ எடுக்கப்பட்டு, "நீ வெளிய போனா உன் அப்பா-அம்மா கிட்ட அனுப்புவேன்.. எங்க கூடவே இருந்தா.. லைஃப என்ஜாய் பண்ணலாம்.. நான் எப்போ கூப்பிட்டாலும் நீ வரணும்.. என்கூட உல்லாசமாக இருக்க உனக்கு பணம் கிடையாது.. அதே போல வெளி ஆட்களுடன் இருக்கும் போது நான் தான் பணம் வாங்குவேன்.. அதுல இருந்து தான் உன்னோட பங்கு.. என்னை விட்டுட்டு நேரடியா நீ தொழில் பண்ணலாம்ன்னு நினைச்சா.. உன் அப்பா-அம்மாவுக்கு இந்த வீடியோ போகும்" என்று மிரட்டப்பட்டிருந்தாள்.

அதனால்தான் அவள் தொடர்ந்து இதை செய்தாள். அவள் "கெட்டவள்" இல்லை... பயத்தில் சிக்கியவள்.அப்பா ராமசாமி அழுதார். " யார் யாரோ என் புள்ளைய கெடுத்துட்டாங்க...

அனுராக் சொன்னார்:

"அய்யா... யாரும் கெடுக்கல. நகரத்தின் வாசனை, பணம், மோகம், அறியாமை... இவையெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய வலை பின்னுது. அய்யா.. பெண்கள் பட்டம் போல.. பெண்களுக்கு சுதந்திரம் முக்கியம் தான்... ஆனா கைவிட்டு விடக்கூடாது. என்னதான் பட்டம் உயர உயர பறந்தாலும், அதனுடைய நூலின் முனை தரையில் நிற்கும் நபரிடம் இருக்கும் வரை தான் பட்டத்திற்கு பாதுகாப்பு, அந்த நபர் நூலை விட்டுவிட்டாலோ, அல்லது பட்டம் நூலை அறுத்துக்கொண்டு பறந்தாலோ, பாதிப்பு பட்டத்திற்கு தான்.. அவேர்னஸ் இல்லைனா, இந்த வலையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது."

இறுதியில் சாரதா பெற்றோரின் ஆலோசனைப்படி போலீஸில் கேஸ் கொடுத்தாள். விக்ரம், ராகுல் கைது. ஆனா அந்த வலையில் சிக்கிய பல பெண்கள் இன்னும் வெளியே வரவில்லை.

முடிவு வார்த்தைகள்:

பெங்களூரின் பளிச்சொளி டவர்கள், ஹை-எண்ட் பார்கள், இன்ஸ்டா ரீல்ஸ்... எல்லாமே அழகாகத் தெரியும். ஆனா அதற்கு கீழே ஒரு நிழல் உலகம். அந்த நிழலில் சிக்குபவர்கள் பலர். ஜாக்கிரதை.

அவேர்னஸ் மட்டுமே போதும்... பல வலைகளை அறுத்து வெளியே வர. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நம்மைச் சுற்றியும் நடக்கலாம் என்ற பயம் நெஞ்சில் இருந்தால், இது போன்ற கொடூரங்களை தடுக்கலாம்.

Summary : A village girl moves to Bangalore for engineering studies on scholarship. City life gradually draws her into part-time jobs, modeling offers, and exclusive parties. Money increases, but hidden networks and pressures emerge. Family discovers the truth through investigation, realizing the dangers of unchecked freedom and lack of awareness in urban settings.