“பெண்ணின் சடலத்துடன் ஒரு வருடம்..” கேட்டாலே உடம்பெல்லாம் கூசுது.. நான்கு ஆண்டுகள் கழித்து சிக்கிய கொடூரன்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், 2024-ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு சாதாரண ஆயுத கடத்தல் வழக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரமான கொலையின் மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

இது ஒரு காதல், கோபம், கொலை, உடலை மறைக்கும் திட்டம்... எல்லாமே ஒரு கிரைம் தொடர் போன்று நடந்தது!

கதையின் தொடக்கம் – 2019

உதய்பூரின் டெல்லி கேட் பகுதியில் உள்ள ஹனுமான் கோயிலில் பூஜாரியாக பணியாற்றி வந்தார் ராகுல் ராஜ் சதுர்வேதி. அவர் 40 வயதானவர். ஒரு நாள், இரண்டு குழந்தைகளுடன் கண்ணீருடன் கோயிலுக்கு வந்தார் பானுப்ரியா கோஸ்வாமி (33 வயது).

அவர் தன் கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டை விட்டு ஓடி வந்ததாகக் கூறினார். பணமின்றி, செல்ல இடமின்றி தவித்த அவளுக்கு ராகுல் உதவி செய்தார். கோயிலில் தங்க அனுமதித்தார்.

சில நாட்களில் பானுப்ரியா திரும்பிச் சென்றார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகள் இல்லாமல் மீண்டும் வந்தார். தன் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாகவும், குழந்தைகள் கணவனுடன் இருப்பதாகவும் கூறினார்.

இதற்குள் ராகுலுக்கும் பானுப்ரியாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் உதய்பூரை விட்டு ராஜ்சமந்த் பகுதிக்கு சென்று வாடகை வீட்டில் வாழத் தொடங்கினர். ராகுல் கோயில் பணியை விட்டு, டீ கடை வைத்து வாழ்க்கை நடத்தினார்.

பிரச்சினைகள் தொடங்கியது – 2020

2020-இல் கொரோனா பரவல், ஊரடங்கு... ராகுலின் டீ கடை மூடப்பட்டது. வீட்டில் இருவரும் தினமும் சண்டையிட்டனர். சிறிய விஷயங்களுக்கும் பெரிய சண்டை. ஒரு இரவு, மே 20, 2020 அன்று பெரிய சண்டை வெடித்தது. கோபத்தில் ராகுல் பானுப்ரியாவின் கழுத்தைப் பிடித்து நெரித்து கொன்றுவிட்டார்.

அதிர்ச்சியில் உறைந்த ராகுல், தன் தவறை உணர்ந்தார். ஆனால் உடலை எப்படி மறைப்பது? அவர் யூடியூப்பில் 'கிரைம் பேட்ரோல்' தொடரை பார்ப்பவர்.

அவர் 1,300-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை பார்த்திருந்தார்! ஒரு எபிசோடில் (எபிசோட் 774), கொலையாளி உடலை பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு சிமெண்ட் ஊற்றி மறைத்த காட்சி இருந்தது.

ராகுல் அதே திட்டத்தை செயல்படுத்தினார். வீட்டில் இருந்த ஒரு ட்ரம்மை எடுத்து, உள்ளே சிமெண்ட் கலந்து பூசினார். பானுப்ரியாவின் உடலை அதில் போட்டு, சிமெண்ட் கலவையால் நிரப்பி மூடினார். கடைசியில், ட்ரம்மை அறையிலேயே வைத்துவிட்டார்.

ரகசியம் வெளியாகும் அபாயம் – 2022

ஒரு வருடத்துக்கு மேல் அந்த ட்ரம் அவரது அறையிலேயே இருந்தது. அவ்வப்போது, அந்த அறைக்கு வந்து சோதனை செய்து செல்வார் ராகுல். 2022 ஜூன் மாதம், வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்து ஒரு கொடூர வாசனை வருவதாக புகார் செய்தார்.

ராகுல் அவசரமாக சென்று பார்த்தபோது, பீப்பாய் கசிந்து வாசனை வருவதை கண்டார். கீழ்ப்பகுதியில் சிறிய அளவில் மட்டுமே சிமெண்ட் கலவை கொட்டியதால் தவறு நடந்திருந்தது!

ட்ரம் மிகவும் கனமாக இருந்ததால் தனியாக நகர்த்த முடியவில்லை. ராகுல் உரிமையாளரை மிரட்டினார் – "நீ போலீஸிடம் சொன்னால், நீயும் என் இதுக்கு உடந்தைன்னு சொல்லி சிக்க வைப்பேன்!" என்று. பயந்த உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.

இருவரும் இரவில் மலைப்பகுதிக்கு சென்றனர். முகத்தை துணியால் இறுக்கமாக மூடிக்கொண்டு, ட்ரம்மின் கீழ்பகுதியை உடைத்து, உடல் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆற்றில் வீசினர். ட்ரம்மை ஆற்றோட்டத்தில் விட்டுவிட்டனர்.

2024-இல் ரகசியம் வெளியானது

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2024-இல் ஒரு ஆயுத கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார். அவர் விற்ற துப்பாக்கிகளை வாங்கியவர்களில் ஒருவர் ராகுல் ராஜ் சதுர்வேதி என்று கூறினார். போலீஸார் ராகுலை கைது செய்தனர். அவரது பழைய வழக்குகளை சரிபார்த்தனர்.

பானுப்ரியா என்பவர் 2020 முதல் காணாமல் போயிருந்தார். அவரது சகோதரியிடம் விசாரித்தபோது, 2020 முதல் தொடர்பில்லை என்று தெரிந்தது. ராகுலிடம் மீண்டும் விசாரணை நடத்தியபோது, அவருடைய தொலைபேசி ஆதாரங்களை காட்டி அழுத்தம் கொடுத்தனர்.

இறுதியில் ராகுல் உடைந்து அனைத்தையும் ஒப்புக்கொண்டார். அவரது கூட்டாளியான வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். போலீஸார் எலும்புத் துண்டுகள், முடி, இரத்தம் போன்ற ஆதாரங்களை மீட்டுள்ளனர்.

இந்த கொலை, காதலின் பெயரால் தொடங்கி, கிரைம் தொடரால் ஈர்க்கப்பட்ட கொடூர திட்டமாக மாறியது. உதய்பூர் போலீஸின் தீர விசாரணைக்கு பாராட்டுகள்! இது போன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும்.

Summary : In 2020, a former temple priest and his partner had frequent arguments during lockdown. Following a dispute, the woman went missing. In 2024, police investigation linked him to an illegal firearm purchase, leading to renewed inquiry. He later confessed to the incident and disposal of evidence with help from his landlord.