“பெண்ணின் சடலத்துடன் ஒரு வருடம்..” கேட்டாலே உடம்பெல்லாம் கூசுது.. நான்கு ஆண்டுகள் கழித்து சிக்கிய கொடூரன்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், 2024-ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு சாதாரண ஆயுத கடத்தல் வழக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரமான கொலையின் மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இது ஒரு காதல், கோபம், கொலை, உடலை மறைக்கும் திட்டம்... எல்லாமே ஒரு கிரைம் தொடர் போன்று நடந்தது! கதையின் தொடக்கம் – 2019 உதய்பூரின் டெல்லி கேட் பகுதியில் உள்ள ஹனுமான் கோயிலில் பூஜாரியாக பணியாற்றி வந்தார் ராகுல் ராஜ் சதுர்வேதி. அவர் 40 வயதானவர். ஒரு நாள், இரண்டு குழந்தைகளுடன் கண்ணீருடன் கோயிலுக்கு வந்தார் பானுப்ரியா கோஸ்வாமி (33 வயது). அவர் தன் கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டை விட்டு ஓடி வந்ததாகக் கூறினார். பணமின்றி, செல்ல இடமின்றி தவித்த அவளுக்கு ராகுல் உதவி செய்தார். கோயிலில் தங்க அனுமதித்தார். சில நாட்களில் பானுப்ரியா திரும்பிச் சென்றார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகள் இல்லாமல் மீண்டும் வந்தார். தன் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாகவும், குழந்தைகள் கணவனுடன் இருப்பதாகவும் கூறினார். இதற்குள் ராகுலுக்கும் பானுப்ரியாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் உதய்பூரை விட்டு ராஜ்சமந்த் பகுதிக்கு சென்று வா...