வடமாநில இளைஞருடன் உடலுறவு! மனைவி சொன்ன வார்த்தை! துடிதுடித்து பிரிந்த உயிர்! விசாரணையில் வெளியான அசிங்கம்!

ஓசூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பார்த்திபன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான அம்சவள்ளி என்பவரை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பத்தினரும் இத்திருமணத்தை ஏற்காத நிலையில், இத்தம்பதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர்பேட்டை, பச்சை குளம் பகுதியில் வாடகை வீடு எடுத்து கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பார்த்திபன் மூட்டை தூக்கும் தொழிலும், அம்சவள்ளி கட்டிட வேலைக்குச் செல்வதுமாக இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அம்சவள்ளி கட்டிட வேலைக்குச் செல்லும் இடத்தில் அவருடன் பணிபுரிந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான கரண் தாஸ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இது பின்னர் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பார்த்திபன் வீட்டில் இல்லாத நேரங்களில் கரண் தாஸ் அடிக்கடி அம்சவள்ளியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.

இந்த விவகாரம் பார்த்திபனுக்குத் தெரிய வந்ததும், அவர் மனைவியிடம் கேட்டபோது அம்சவள்ளி சரியாக பதில் அளிக்காமல் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பார்த்திபன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அவ்வப்போது மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, கணவர் பார்த்திபனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 4, 2026) இரவு, போதையில் வீட்டிற்கு வந்த பார்த்திபனை அம்சவள்ளி தனது சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து வந்த உறவினர்களும், பார்த்திபனின் தம்பியும் சம்பவ இடத்திற்குச் சென்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசூர் போலீசார், பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அம்சவள்ளியை கைது செய்தனர். மேலும் அவரது கள்ளக்காதலன் கரண் தாஸையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : In Krishnagiri's Hosur, a 32-year-old man Parthiban was found dead at home. His 28-year-old wife Amshavalli initially claimed it was self-inflicted. Police investigation revealed she caused his death due to a long-standing extramarital relationship with a co-worker. Both she and the man were arrested.