கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டம், தேவரஹிப்பராகி நகரின் அமைதியான தெருவொன்றில், பிரபு ரத்னாகரின் வீடு இருந்தது.;
வெளியில் பார்க்கும்போது அது சாதாரண குடும்ப வீடு – கட்டிட கான்ட்ராக்டரான பிரபு, மனைவி சரோஜினி, அவர்களது சிறு மகன். ஆனால் வீட்டின் உள்ளே, கடன் சுமை, பொய்கள், வாக்குவாதங்கள் என ஒரு இருண்ட கதை நடந்து கொண்டிருந்தது.

ஜனவரி 23 இரவு. வீட்டில் மீண்டும் ஒரு கடுமையான சண்டை. பிரபு பல இடங்களில் கடன் வாங்கியிருந்தான் – அத்தனையும் சரோஜினியின் பெயரில். அவளது பெயரில் காசோலைகள் கொடுத்து, பணம் திருப்பி செலுத்தாததால் செக் பவுன்ஸ் வழக்குகள் வந்தன.;
"உன் அம்மா வீட்டிலிருந்து பணம் வாங்கி வா" என்று பிரபு அழுத்தம் கொடுத்தான். சரோஜினி மறுத்தாள். சண்டை உச்சத்துக்கு சென்றது.
அடுத்த நாள் அதிகாலை, ஜனவரி 24. வீட்டில் அமைதி. மகன் உறங்கிக் கொண்டிருந்தான். பிரபு கோபத்தில் இருந்தான். அருகில் இருந்த மரத்தால் ஆன உலக்கையை எடுத்து சரோஜினியின் தலையில் வேகமாக அடித்தான்.;
விடிய விடிய நடந்த கொடூரம்..;
உலக்கையின் இரு முனையும் இரும்பால் ஆனது என்பதால் ஒரே அடியில் இரத்தம் பெருகியது. சரோஜினி தரையில் சரிந்தாள். சில நிமிடங்களில் அவள் உயிர் பிரிந்தது.
பிரபு அதிர்ச்சியடைந்தான். ஆனால் உடனடியாக தன்னை சமாளித்துக் கொண்டான். ஏற்கனவே வீட்டு வளாகத்தில் சில செடிகள் நடுவதற்காக ஒரு சிறிய குழி தோண்டியிருந்தார் சரோஜினி.( அப்போது சரோஜினிக்கு தெரியாது, இந்த குழியில் தான் தன்னுடைய சடலம் புதைக்கப்பட இருக்கிறது என்று )
இரவோடு இரவாக அந்த குழியை; இன்னும் பெரிதாக்கினான் – விடிய விடிய அந்த கொடூரம் அரங்கேறியது.. ஐந்து அடி நீளம், மூன்று அடி அகலம், ஏழடி ஆழம் என குழியை பெரிதாக்கு.. சரோஜினியின் உடலை அதில் போட்டு மண்ணால் மூடினான். மேலே செடிகள் நட்டு மறைத்தான். பிறகு, எதுவும் நடக்காதது போல நடந்து கொண்டான்.
பின்னர், பிப்ரவரி 2 அன்று தேவரஹிப்பராகி காவல் நிலையத்தில் சென்று கண்ணீரோடு புகார் கொடுத்தான். "என் மனைவி ஜனவரி 24 காலை ஷாப்பிங் போனாள்... திரும்பவில்லை" என்றான்.;
செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றதாகச் சொன்னான். உறவினர்கள் வீடுகளில் தேடினேன், எங்கும் கிடைக்கவில்லை என்றான்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தேடினர். டவர் லொகேஷன் பார்த்தபோது செல்போன் வீட்டிலேயே இருப்பது தெரிந்தது. சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் பிரபு தொடர்ந்து நாடகமாடினான்.;
லாட்ஜில் வினோதம்..;
ஒரு காரை வாடகைக்கு எடுத்து, "பெங்களூரில் தேடப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றான். ஆனால் கார் ஓட்டுநரிடம் விசாரித்தபோது பகீர் உண்மை தெரிந்தது.
சார்.. அவரு லாட்ஜிலேயே தங்கி இருக்கிறார், வெளியே எங்கும் செல்லவில்லை. சாப்பாட்டை கூட ஆன்லைனில் ஆர்டர் போட்டு தான் வாங்கி சாப்பிடுகிறார். மனைவியை தேடுவதாக வந்து விட்டு இங்கே அறைக்குள்ளே முடங்கி கிடக்கிறார்.. வினோதமாக இருக்கு.. என்று கார் ஓட்டுனர் கூறினார்.
மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது – சரோஜினியின் நோய்வாய்ப்பட்ட தந்தை பிப்ரவரி 14 அன்று இறந்தபோது, மருமகனான பிரபு அங்கு கூட செல்லவில்லை.
மாமியார் கூறிய பகீர் தகவல்..
இறுதியாக, சரோஜினியின் தாய் கமலா பிப்ரவரி 17 அன்று புகார் கொடுத்தார். என் மருமகன் பிரபு மீது எனக்கு சந்தேகம் உள்ளது. என் மகளை அவர் தான் என்னமோ செய்து விட்டார். கடன், செக் மோசடி விவரங்கள் வெளியாகின. போலீசார் வீட்டு வளாகத்தை தோண்டினர். அங்கேயே... சரோஜினியின் சடலம்.
விசாரணையில் பிரபு உண்மையை ஒப்புக்கொண்டான். "கடன் நெருக்கடி... சண்டை... கட்டையால் அடித்தேன்... புதைத்தேன்" என்றான். மகன் உறங்கும் போதே கொலை நடந்தது. பின்னர் தேடுவது போல நடித்தான்.
இந்த சம்பவம் தேவரஹிப்பராகி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கணவன், தன் மனைவியைக் கொன்று வீட்டிலேயே புதைத்து, 24 நாட்கள் தேடுவது போல நாடகமாடிய கதை... கடன் சுமையால் உருவான கொடூரமான முடிவு.
இன்று, பிரபு ரத்னாகர் கொலை, சடலத்தை மறைத்தல், போலீசாரை ஏமாற்றியது உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு குடும்பத்தின் அமைதி என்றும் திரும்பாத வகையில் உடைந்துவிட்டது.
Summary in English : In Vijayapura district, Karnataka, a contractor reported his wife missing on February 2 after she left home on January 24 for shopping. Police investigation revealed inconsistencies, leading to the discovery of her body buried in their house premises. The husband was arrested following questioning.

