சத்தீஸ்கரின் ஒரு சாதாரண கிராமத்தில், வீட்டின் சுவர்களுக்குள் ஒரு குடும்பம் மெல்ல மெல்ல சிதைந்து கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தில் ரமேஷ் என்பவர் தலைமை தாங்கினார்.
அவரது மனைவி சுசீலா, 42 வயதானவர். மகன் அர்ஜுன், 19 வயது இளைஞன். மூவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு வருடமாக சுசீலாவின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் தென்பட்டன.

முன்பெல்லாம் எளிமையாக இருந்த சுசீலா, திடீரென பிரகாசமான புடவைகள், புதிய நகைகள், அடிக்கடி ஆன்லைன் ஆர்டர் செய்து வரும் பொருட்கள்... எல்லாமே வியப்பை ஏற்படுத்தின.
ஒரு மாதத்தில் பல லட்ச ரூபாய் செலவு செய்திருந்தார். ஆனால் வங்கிக் கணக்கில் எந்த பெரிய வரவும் இல்லை. ரமேஷும் அர்ஜுனும் குழம்பிப் போனார்கள்.
"இவ்வளவு பணம் எங்கிருந்து வருது?" ரமேஷ் அடிக்கடி கேட்டார்.சுசீலா சிரித்தபடி, "நான் சேமிச்சு வச்சிருந்தேன்... பழைய பணம்" என்று சமாளித்தார்.
ஆனால் அர்ஜுனுக்கு அது நம்பகமாகத் தெரியவில்லை. இரண்டு மாதங்களாக அம்மாவை கூர்ந்து கவனித்தான். அவர் வீட்டை விட்டு வெளியே போவதே இல்லை. ஆனால் பணம் செலவு செய்வது நிற்கவில்லை. வங்கி ஸ்டேட்மெண்ட் பார்த்தபோது எந்த சந்தேகமும் வரவில்லை. அப்போதுதான் அவனுக்கு ஒரு கொடூரமான யோசனை தோன்றியது.
அம்மாவின் போனை ஹேக் செய்ய முடிவு செய்தான். ஒரு சிறிய ஸ்பை ஆப் மூலம் Front Camera-வை ரிமோட் ஆக கட்டுப்படுத்தும் வசதியை அமைத்தான். முதலில் எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு இரவு... அந்த இரவு அவன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக மாறியது.
இரவு 11 மணி. சுசீலா தனியறையில் போனை வைத்து, லைட்டை மங்கலாக்கி, மேக்கப் போட்டு, சிரித்தபடி வீடியோ கால் செய்தார். மறுபக்கத்தில் பல ஆண்கள்... ஒவ்வொருவரும் வித்தியாசமான பேச்சு, ஆசை நிறைந்த வார்த்தைகள்.
சுசீலா அவர்களை மகிழ்விக்கும் வகையில் பேசினார், உடலை காட்டினார், அவர்களின் கற்பனைகளை நிறைவேற்றினார். ஒரு மணி நேரம்... இரண்டு மணி நேரம்... ஒவ்வொரு காலுக்குப் பிறகும் அவரது UPI-யில் பணம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாளைக்கு 5,000 முதல் 10,000 ரூபாய் வரை.
அர்ஜுன் திரையைப் பார்த்தபோது உடல் முழுவதும் நடுங்கியது. கண்கள் கலங்கின. அவன் அம்மா... அவனுக்கு தெரிந்த அந்த அன்பான அம்மா... இப்படி செய்து கொண்டிருக்கிறாளா? அவன் மனம் உடைந்தது.
மறுநாள் காலை அர்ஜுன் தந்தை ரமேஷிடம் எல்லாவற்றையும் சொன்னான். வீடியோ காட்சிகளை காட்டினான். ரமேஷின் முகம் சிவந்தது. கோபம் கொதித்தெழுந்தது. "என் மனைவி... என் குடும்பத்தின் மானத்தை இப்படி விற்றுட்டாளா?" என்று கத்தினார்.
அன்று இரவு சுசீலா அறைக்குள் இருந்தபோது ரமேஷ் உள்ளே நுழைந்தார். கையில் இரும்பு ராட். "நீ என்ன செய்றேன்னு தெரியும்... இந்த வீட்டுல நீ இருக்க உரிமை இல்லை!" என்று கத்தினார். சுசீலா பதறினார். மன்னிப்பு கேட்டார். ஆனால் ரமேஷின் கோபம் அடங்கவில்லை. அடி... அடி... அடி... இரத்த வெள்ளத்தில் சுசீலா சரிந்து விழுந்தார்.
அர்ஜுன் ஓடி வந்தபோது அம்மா ரத்தத்தில் நனைந்து கிடந்தார். தந்தை அருகில் நின்று கொண்டிருந்தார். "நான் தான் செய்தேன்... இது என் குடும்பத்தின் மானத்துக்காக" என்று ரமேஷ் சொன்னார்.
அர்ஜுன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய வயதுக்கு பார்க்க கூடாத கொடூரமான காட்சி. வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அழுதான், அம்மாவை அப்பா கொன்னுட்டாரு..ன்னு என வார்த்தைகள் வராமல் திக்கி திக்கி அழுதான்.
அக்கம் பக்கத்தினர் அறிவுரைப்படி முதலில் காவல் நிலையத்துக்கு ஓடினான். ஆனால், ரமேஷ் ஏற்கனவே காவல் நிலையத்துக்கு போன் செய்து விபரத்தை சொல்லி சரணடைகிறேன் "என் மனைவியை நான் கொலை செய்தேன். அதற்கு நான் தான் பொறுப்பு" என்று ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் சத்தீஸ்கர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இணைய உலகில் இன்று பல பெண்கள் — இளம் பெண்கள் முதல் திருமணமானவர்கள், வயதானவர்கள் வரை — இதே போன்ற ஆன்லைன் வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர். சிலருக்கு அது தற்காலிக வருமானமாகத் தெரிகிறது. ஆனால் அது குடும்பத்தில் பெரும் வெடிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தக் கதை ஒரு எச்சரிக்கை.இணையம் கொடுக்கும் சுதந்திரம்... சில சமயங்களில் குடும்பங்களை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடுகிறது. மானம், அன்பு, நம்பிக்கை என்று எல்லாம் ஒரு வீடியோ காலில் இழந்து போகின்றன.
இப்படி ஒரு கொடூர முடிவுக்கு வராமல் இருக்க... பேசுங்கள். புரிந்து கொள்ளுங்கள். ஆனால் மானத்தின் பெயரால் கொலை செய்வது எந்த வகையிலும் நியாயமாகாது.
Summary in English : In Chhattisgarh, a son noticed his mother's unusual spending and monitored her phone's front camera. He discovered she was earning money through intimate video calls at night. Upon informing his father, a serious family conflict occurred, leading to the mother's death. The father surrendered to police.

