தவெகவுக்கு இன்று முதல் சரிவு ஆரம்பம்.. 2029 தேர்தலில் தவெக களத்திலேயே இருக்காது.. பிரபல இயக்குனர் பொளீர்!

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து நின்று அனைத்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட முடிவு செய்துள்ளது.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் என்டிஏ கூட்டணியில் சேர மாட்டோம் என தவெக தரப்பில் திட்டவட்டமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் கட்சி தனித்து நிற்கும் முடிவை உறுதிப்படுத்தியுள்ளது. திருச்சியில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்பு இருந்தபோதும், “கூட்டணி பேச்சு எதுவும் இல்லை; தனித்து போட்டியிடுவோம்” என தவெக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். “தனித்து போட்டியிடுவது தான் பலம். மக்கள் நம்முடன் தான் இருக்கிறார்கள். கூட்டணி இல்லாமலே வெற்றி பெறுவோம்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகம் பொங்கக் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் தனித்து நிற்பது அவருடைய அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்க கூடிய ஒரு விஷயம். 2021-இல் நடிகர் கமலஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியைப் போல 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சி காணாமல் போகும்.எப்படி 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லையோ, அதுபோல 2029-இல் நடிகர் விஜயின் தவெக போட்டியே போடாது.

ஏற்கனவே, 2024 தேர்தலை புறக்கணித்தார் விஜய்.அதுபோல 2029-ஐயும் புறக்கணிக்கப் போகிறார். வாக்குகளை பிரித்து இரு பெரிய கட்சி வேட்பாளர்களும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் இந்த முடிவு விஜயின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பிரபல இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இது குறித்து தீவிர விமர்சனம் முன்வைத்துள்ளார். அவரது பதிவு வைரலாகி வருகிறது.

மோகன் ஜி கூறியதாவது: “ இன்று முதல் சரிவு ஆரம்பம்.. நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே அரசியல்.. இப்பவும் சொல்றேன்.. ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது.. எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமையும்.. உங்கள் அரசியல் ஆரம்பமே அஸ்தமனம் ஆகும்.. காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.”

இயக்குநர் மோகன் ஜியின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் இதை ஆதரிக்க, மற்றவர்கள் விஜய் ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசியல் களம் இனி மிகவும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Summary : Tamilaga Vettri Kazhagam, led by Vijay, will contest all 234 assembly seats independently in 2026 without joining any alliance, including NDA. Fans welcome the decision, while director Mohan G criticizes it, predicting limited seats, possible decline like Makkal Needhi Maiam, and an AIADMK government under Edappadi Palaniswami.