Posts

Showing posts with the label political future

தவெகவுக்கு இன்று முதல் சரிவு ஆரம்பம்.. 2029 தேர்தலில் தவெக களத்திலேயே இருக்காது.. பிரபல இயக்குனர் பொளீர்!

Image
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து நின்று அனைத்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கு முன்னும் பின்னும் என்டிஏ கூட்டணியில் சேர மாட்டோம் என தவெக தரப்பில் திட்டவட்டமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் கட்சி தனித்து நிற்கும் முடிவை உறுதிப்படுத்தியுள்ளது. திருச்சியில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்பு இருந்தபோதும், “கூட்டணி பேச்சு எதுவும் இல்லை; தனித்து போட்டியிடுவோம்” என தவெக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த முடிவை விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். “தனித்து போட்டியிடுவது தான் பலம். மக்கள் நம்முடன் தான் இருக்கிறார்கள். கூட்டணி இல்லாமலே வெற்றி ப...