ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் உள்ள ஒரு சாதாரண ஜெராக்ஸ் கடையில் இருந்து தொடங்கிய ‘நட்பு’ இப்போது பெரிய ஊழல் வழக்காக மாறியுள்ளது.
20 வயது கல்லூரி மாணவன் ஆகாஷ் வெர்மா (ராஜேஷ் வெர்மா எனும் பிரபல தொழிலதிபரின் ஒரே மகன்) மீது 48 வயது மீனா தேவி என்பவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கர்ப்பம் என புகார் அளித்திருந்த நிலையில், போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி திருப்பங்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் மீனா தேவி, ஒரு பெரிய சதியை திட்டமிட்டிருந்ததும், அவரது உண்மையான காதலன் 40 வயது வாட்ச்மேன் ராம் லால் என்பவர் தான் கர்ப்பத்துக்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் ஒரு சுவாரஸ்யமான கதை வடிவில் இங்கே கொடுத்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் வலி கருதி அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.எல்லாம் தொடங்கியது கல்லூரி படிப்புக்காக ஜெராக்ஸ் போடச் சென்றபோதுதான். ஆகாஷ் வெர்மா அடிக்கடி மீனா தேவியின் “ஸ்ரீ மீனா ஜெராக்ஸ்” கடைக்கு வந்து செல்லும் போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
முதலில் படிப்பு பற்றிய உதவி, பின்னர் தனிப்பட்ட உரையாடல்கள்... ஒரு கட்டத்தில் இது கள்ளத்தொடர்பாக மாறியது. ஆகாஷ் ஒரு முறை மட்டுமே உறவு கொண்டதாகவும், பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தியதாகவும் போலீசிடம் தெரிவித்தார்.
ஆனால் மீனா தேவியோ, “என்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டார்” என்று காவல்துறையில் புகார் அளித்தார்.
அதே நேரத்தில் ஆகாஷின் தந்தை ராஜேஷ் வெர்மா, மகனின் நடவடிக்கைகளை முன்கூட்டியே சந்தேகித்து, தனது உறவினர் மகள் 18 வயது ப்ரியங்காவுக்கு திருமணம் செய்து வைத்தார்.
திருமணம் முடிந்து சில நாட்களில் தான் மீனா தேவியின் புகார் வெளியானது. மீனா தேவி போலீசிடம் சமர்ப்பித்த சிசிடிவி காட்சிகளில் இரவு நேரங்களில் ஆகாஷ் அவரது வீட்டுக்கு வந்து செல்வது தெளிவாகத் தெரிந்தது. வழக்கு விஸ்வரூபம் எடுத்தது.
ராய்பூர் போலீஸ் உடனடியாக ஆகாஷை கைது செய்து விசாரித்தபோது அவர் “நான் ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். ஆனால், அவர் கர்ப்பமாக இருப்பதற்கு நான் காரணமில்லை” என்று கூறினார்.
இங்குதான் முதல் பெரிய திருப்பம்! போலீசார் சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்தபோது, மீனா தேவிக்கும் அதே பகுதியில் உள்ள கல்லூரி வாட்ச்மேன் ராம் லாலுக்கும் நீண்ட நாள் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
ராம் லாலை பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். “மீனா தேவியும் நானும் காதலர்கள். அவர் என்னால் தான் கர்ப்பமாகி இருக்கிறார். ஆனால் ஆகாஷ் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை சிக்க வைத்து 25 லட்சம் ரூபாய் பணம் பறிக்க திட்டமிட்டோம். சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி பயமுறுத்தி பணம் பெறலாம் என்று மீனா சொன்னார்” என்று ராம் லால் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இரண்டாவது பெரிய திருப்பம்: மீனா தேவி இதற்கு முன்பும் இரண்டு முறை இதேபோன்ற புகார்களை பணம் பறிப்பதற்காக பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இளைஞர்களிடம் நெருக்கமாக பழகி உடலுறவு வரை அனுமதித்து அதன் பிறகு கர்ப்பமாகி விட்டேன் நீ தான் காரணம் என்று மாணவர்களை மிரட்டி, அவர்களது குடும்பத்தினரிடம் பஞ்சாயத்து பேசி சில லட்சங்களை செட்டில்மெண்டாக வாங்கி கொண்டு அடுத்த மாணவனை தேட ஆரம்பித்து விடுவது மீனாதேவியின் அழக்கம்.
அவரது ஜெராக்ஸ் கடை உண்மையில் ஒரு முகப்பு மட்டுமே என்றும், பல இளைஞர்களை இழுத்து சிக்க வைத்து பணம் பறித்த சம்பவங்கள் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும், ஆகாஷின் திருமணம் முடிந்த பிறகு ப்ரியங்கா தனது கணவருக்கு எதிராக விவாகரத்து மனு தாக்கல் செய்ய முன்வந்திருப்பதாகவும், “என்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்தார்கள்” என்று கூறியிருப்பதாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது அதிர்ச்சி திருப்பம்: டிஎன்ஏ சோதனைக்காக மீனா தேவியின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் இன்னும் சில நாட்களில் வரவுள்ள நிலையில், ராம் லால் ஏற்கனவே “குழந்தை என்னுடையது” என்று ஒப்புக்கொண்டிருப்பதால் ஆகாஷ் மீதான புகார் பொய்யானது என்பது உறுதியாகி வருகிறது.
ராய்பூர் போலீஸ் கமிஷனர் கூறுகையில், “இது ஒரு திட்டமிட்ட பணம் பறிக்கும் சதி. மீனா தேவி, ராம் லால் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில நபர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றார்.
இந்த சம்பவம் துர்க் நகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணக்கார இளைஞர்களை இலக்காகக் கொண்டு இதுபோன்ற சதிகள் நடைபெறுவது தொடர்பாக பொதுமக்கள் ஆத்திரம் தெரிவித்து வருகின்றனர்.
ஆகாஷ் வெர்மா தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. இந்த “ஜெராக்ஸ் காதல்” சதி எப்படி ஒரு இளைஞனின் வாழ்க்கையை கிட்டத்தட்ட அழித்தது என்பது இப்போது சத்தீஸ்கர் முழுவதும் பேச்சாக உள்ளது.

ஆகவே, இளைஞர்களே,, மாணவர்களே.. ஆண்ட்டி சிக்னல் குடுக்குது.. நெருக்கமா பேசுது.. என நெருங்கி விடாதீர்கள்.. அந்த நெருக்கம் எலிப்பொறிக்குள் வைக்கப்பட்ட தேங்காய் பர்பியாக கூட இருக்கலாம்.. தேங்காய் பர்பிக்கு ஆசைப்பட்டு கூண்டுக்குள்ள சிக்கிடாதிங்க.. உஷார்.. இன்றைய உலகில் இப்படியெல்லாம் நடக்காது என எதையும் சொல்ல முடியாது. எனவே, உஷார்..!
Summary in English : In Chhattisgarh, a 20-year-old college student from a wealthy family developed a friendship with a 48-year-old woman who runs a xerox shop. The acquaintance turned into a personal relationship. After his arranged marriage, the woman filed a complaint claiming pregnancy. Police investigation revealed she planned to demand money and the actual situation involved another person. The case is under inquiry.

