குருகிராம்: செக்டர் 53 பகுதியில் உள்ள ஒரு பிஜி (PG) குடியிருப்பில் தங்கியிருந்த 29 வயது இளைஞர், பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூர் அருகேயைச் சேர்ந்த ரோஹித் லால் என்பவர், புது தில்லியில் உள்ள குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இதற்காக குருகிராமில் வாடகை அறை ஒன்றில் தங்கியிருந்தார்.

வியாழக்கிழமை காலை, அவருடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமாக இருவரும் சேர்ந்தே அலுவலகம் செல்வது வழக்கம். ஆனால் அன்று ரோஹித் போனை எடுக்காததால் மற்றும் அறை கதவைத் திறக்காததால், நண்பர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, ரோஹித் படுக்கையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அறையை சோதனையிட்டபோது, பல்வேறு வகையான மருந்து உறைகள், ஆரோக்கிய பானப் பவுடர் பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்தன.
வருங்கால மனைவியை சந்திக்கும் எதிர்பார்ப்பில்...
ஆரம்பகட்ட விசாரணையில், ரோஹித் தனது வருங்கால மனைவியை நேரில் சந்திப்பதற்காக அழைத்திருந்தது தெரியவந்தது. அவர் வருவதற்கு முன்பே இந்த சம்பவம் நடந்துள்ளது. சில தகவல்களின்படி, வருங்கால மனைவி “உடலுறவில் உன்னுடைய திறன் என்னவென்று பார்க்கலாம்” என மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால், முதல் முறையாக வருங்கால மனைவியை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பாலுணர்வு தூண்டும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் பக்க விளைவாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது.
தற்கொலையா? விபத்தா? - விசாரணை தீவிரம்
இது தற்கொலை என்று கருதலாமா அல்லது விபத்து என்று கருதலாமா என இரு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செக்டர் 53 காவல் நிலைய அதிகாரி சதேந்தர் ராவல் கூறுகையில், “கைப்பற்றப்பட்ட மருந்துகள் மற்றும் உடலின் சில பாகங்கள் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை வந்த பின்னரே உண்மையான மரண காரணம் தெரியவரும். அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
இந்தச் சம்பவம் இளைஞர்கள் மத்தியில் பாலுணர்வு மருந்துகளின் அபாயகரமான பயன்பாடு குறித்து மீண்டும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : A 29-year-old man named Rohit Lal from Nagpur, working at the Quality Council of India in New Delhi, was found dead in his paying guest accommodation in Sector 53, Gurugram. Police recovered several medicine strips and health supplement packets from his room. He was expecting his fiancée. The cause is under investigation with forensic tests underway.
