பெங்களூர்: கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூரு அஞ்சனபுர பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், தனது காதலனை வீட்டில் நாற்காலியில் கட்டிப்போட்டு தீப்பற்றும் திரவம் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேமா (29) என்பவர் அஞ்சனபுரத்தில் தாய் மற்றும் மாற்று தம்பியுடன் வசித்து வந்தார். அருகிலுள்ள ஒரு கம்யூனிகேஷன் சென்டரில் மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், அதே நிறுவனத்தில் பணியில் இருந்த கிரண் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார்.

இருவரும் நட்பாகப் பழகத் தொடங்கினர். பின்னர் அவர்களது உறவு காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வந்ததுடன், நீண்ட நேரம் தொலைபேசியில் பேசி வந்தனர். ஆனால் சமீப காலமாக கிரண், பிரேமாவுடன் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டதுடன், அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த பிரேமா, “காதலித்துவிட்டு என்னை ஏமாற்றுகிறான், திருமணம் செய்து கொள்ள மாட்டான்” என்று நினைத்து ஆத்திரமடைந்தார்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 21) காலை பிரேமா தனது காதலன் கிரணுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, “வீட்டில் அம்மா, தம்பி இருவரும் இல்லை. நீ வீட்டுக்கு வா, கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்” என்று அழைத்தார். அதன்படி கிரண் பிரேமாவின் வீட்டுக்கு வந்தார். இருவரும் சேர்ந்து உணவு அருந்திய பின்னர் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது பிரேமா, “ஆபாசப் படங்களில் வருவது போல உன்னை நாற்காலியில் கட்டிப்போட்டு உறவு கொள்ள ஆசை” என்று கூறி கிரணை நாற்காலியில் அமர வைத்து கயிற்றால் இறுக்கக் கட்டிப்போட்டார்.
பின்னர் எதிர்பாராத விதமாக கிரணிடம் இருந்த தீப்பற்றும் திரவத்தை அவரது உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் கிரணால் தப்பிக்க முடியவில்லை. நாற்காலியில் கட்டப்பட்டிருந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிரணின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பத்ரஹள்ளி போலீசார், கிரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிரேமா தான் காதலனை எரித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பிரேமாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary : A 29-year-old woman named Prema from Anjanapura in southern Bengaluru had a close relationship with her colleague Kiran. After he began avoiding her, she invited him home when her family was away. They spent time together, during which she restrained him on a chair and a fire incident occurred, resulting in his death at the spot. Police later arrested her following her statement.
