உடலுறவின் போது காதலிக்கு தோன்றிய வினோத ஆசை! நிறைவேற்றிய காதலன் சாம்பலான கொடூரம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூரு அஞ்சனபுர பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், தனது காதலனை வீட்டில் நாற்காலியில் கட்டிப்போட்டு தீப்பற்றும் திரவம் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேமா (29) என்பவர் அஞ்சனபுரத்தில் தாய் மற்றும் மாற்று தம்பியுடன் வசித்து வந்தார். அருகிலுள்ள ஒரு கம்யூனிகேஷன் சென்டரில் மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், அதே நிறுவனத்தில் பணியில் இருந்த கிரண் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார். இருவரும் நட்பாகப் பழகத் தொடங்கினர். பின்னர் அவர்களது உறவு காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வந்ததுடன், நீண்ட நேரம் தொலைபேசியில் பேசி வந்தனர். ஆனால் சமீப காலமாக கிரண், பிரேமாவுடன் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டதுடன், அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பிரேமா, “காதலித்துவிட்டு என்னை ஏமாற்றுகிறான், திருமணம் செய்து கொள்ள மாட்டான்” என்று நினைத்து ஆத்திரமடைந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 21) காலை பிரே...