“போர்வைக்குள் மனைவி செய்த அசிங்கம்” திறந்து பார்த்து ஆத்திரமடைந்த கணவன்! அறைமுழுதும் தெறித்த ரத்தம்!

புதுச்சேரி: செல்போனில் அதிக நேரம் பேசி, சாட்டிங் செய்து வந்த மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், ஆத்திரத்தில் அவரது கழுத்தை செல்போன் சார்ஜர் ஒயரால் இறுக்கி, பின்னர் கத்தியால் அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள ஜீவானந்தபுரத்தில் நடைபெற்றுள்ளது. இறந்த சுவேதா (21) புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஏழுமலை என்கிற சூர்யா (24), விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 3 வயது ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஜீவானந்தபுரத்தில் வீடு எடுத்து வசித்து வந்த சூர்யா, அதே பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக் வேலை செய்து வந்தார். இன்று காலை வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, சுவேதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.

உடனடியாக தன்வந்திரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சுவேதா செல்போனில் அதிக நேரம் பேசி, சாட்டிங் செய்து வந்ததால் சூர்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சுவேதாவை செல்போன் பயன்படுத்த தடை விதித்தும், அவர் அதை பொருட்படுத்தாததால் பிரச்னை தொடர்ந்து வந்துள்ளது.

இன்று காலை சூர்யா தூங்கி எழுந்தபோது, சுவேதா போர்வையை போர்த்திக்கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு கோபம் அடைந்தார். கண்டித்தும் கேட்காததால் ஆத்திரம் அடைந்த சூர்யா, மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றியதையடுத்து, செல்போன் சார்ஜர் ஒயரால் சுவேதாவின் கழுத்தை சுற்றி இறுக்கியுள்ளார். தடுக்க முயன்ற மனைவியை, பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தற்போது சூர்யாவை (ஏழுமலை) தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கொடூர சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : In Puducherry, a man named Surya from Marakanam killed his wife Swetha at their Jeevanandapuram home after an argument over her mobile phone use. Neighbors heard noises and found her injured. Police recovered the body and are searching for the suspect.