“குழந்தை பிறந்த பின்னும் அதற்கு கட்டாயப்படுத்தி..” பிரபல Reels Couple கணவரின் கொடூர பக்கம்! மனைவி பகீர்!

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 26 வயது யுஷானி, குமரி ஸ்லாங்கில் “ஹஸ்பண்ட் ஹஸ்பண்ட்” என மூச்சுக்கு மூச்சு பேசி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு சமூக ஊடகங்களில் பிரபலமானவர்.

இவரது கணவர் ஏபர் காட் (தென்னாப்பிரிக்காவில் கணக்காளராகப் பணியாற்றுபவர்) உட்பட நான்கு பேர் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஜூன் 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது யுஷானியின் பெற்றோர் 30 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை வரதட்சணையாகக் கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே யுஷானி கணவருடன் தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு வீட்டில் தனியாக இருந்தபோது இருவரும் சேர்ந்து “கேகேடி கப்பல்” என்ற இடத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றினர்.

நாட்கள் செல்லச் செல்ல யுஷானி தனது சொந்த குமரி ஸ்லாங்கில் “ஹஸ்பண்ட் ஹஸ்பண்ட்” என பேசி கணவருடன் கண்டென்ட் உருவாக்கி இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்.

இந்த ஸ்லாங் வீடியோக்கள் வைரலாகி, அவர்களது இன்ஸ்டா பக்கத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்கள் கிடைத்தன. மீன் ஊறுகாய், ஹேர் ஆயில் உள்ளிட்ட பல விளம்பரங்களுக்கும் இவர்கள் ப்ரமோஷன் செய்தனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கர்ப்பிணியாக சொந்த ஊருக்கு வந்த யுஷானி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பிறகு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, தாயார் வீட்டில் தூத்தூரில் தங்கி வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு யுஷானி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது:

  • தென்னாப்பிரிக்காவில் கணவர் தினமும் மது அருந்தி, சிகரெட் புகைத்து, அடித்து துன்புறுத்தினார்.
  • பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.
  • ஊருக்கு வந்த பிறகும் உள்ளூர் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தார். அதை நிறுத்தச் சொன்னதால் மாமியார் மற்றும் சகோதரர்களின் தூண்டுதலில் அறையில் அடைத்து வைத்தார்.
  • ரீல்ஸ் எடுக்க கட்டாயப்படுத்தி, அதில் கிடைக்கும் பணத்தை தனது வங்கி கணக்கு மற்றும் மாமியார் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்.
  • குழந்தை பிறந்த பிறகும் ரீல்ஸ் எடுக்க கட்டாயப்படுத்தினார். மறுத்ததால் பெற்றோரிடம் இருந்து கூடுதல் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வருமாறு மிரட்டினார்.
  • கோவாவுக்கு அழைத்துச் சென்று அங்கு அடித்து ரீல்ஸ் எடுக்க வைத்தார். மாமியாரும் “மகனுக்கு சம்பாதித்துக் கொடு” என மிரட்டினார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின்படி, குளச்சல் மகளிர் போலீசார் யுஷானியின் கணவர் ஏபர் காட், அவரது தாயார் மற்றும் இரண்டு சகோதரர்கள் ஆகிய நான்கு பேர் மீது கொலை மிரட்டல், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அப்போ இவ்வளவு நாள் யுஷானியை மிரட்டித்தான் ரீல்ஸ் எடுத்தாங்களா?” என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

“நாம் பார்க்கும் சமூக வலைத்தள வீடியோக்களுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பது இப்போது புரிகிறது” என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary in English : A 26-year-old woman named Yushani from Thoothoor village in Kanyakumari district became popular on social media through reels with her husband. After marriage in 2023 they moved to South Africa. Following family differences she filed a complaint about dowry matters and pressure related to video creation. Police have registered a case against her husband and three family members.