ராஜினாமா செய்யும் 20 MLA-க்கள்! தலைகீழாக மாறும் தவெகவின் நிலை! ஆட்டத்தை தொடங்கிய DMK!
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், அதிமுகவின் கோவைப் பகுதி முகமாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது 20 ஆதரவு எம்எல்ஏக்களுடன் தவெகவில் இணைய இருப்பதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இணையப் பக்கங்களிலும் இந்தத் தகவல் வைரலாகப் பரவி வருகிறது. இந்தத் தகவலின்படி, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்து ஆட்சியை அமைக்க உதவி செய்த பின்னர், அந்த 20 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து, மீண்டும் தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் முனைப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த 20 தொகுதிகளிலும் தவெக கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பதால், விஜய் தலைமையிலான ஆளும் கட்சி நிலையில் இருக்கும் போது இந்த எம்எல்ஏக்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் எஸ்.பி.வேலுமணி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுகவும் த...