சென்னை : பிரபல ஜோதிடர் பண்டிட் ரிக்கி ராதன் வெற்றிவேல் தனது அரசியல் தலைவர்களுடனான நெருக்கம், தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்கள், ஜோதிட நம்பிக்கை மற்றும் ஆன்மீகப் பார்வை குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
ஒரு நீண்ட பேட்டியில் பேசிய அவர், “ஜெயலலிதா அவர்களிடம் தொடங்கி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரை எனக்கு நெருக்கம் கிடைத்தது முழுக்க ஃப்ளூக், காட்ஸ் கிரேஸ்” என்று கூறினார்.

தனது புத்திசாலித்தனத்தை விட, நல்ல டெலிவரி மற்றும் பேச்சு திறன் காரணமாக இந்த உறவு கிடைத்ததாகவும், “எங்கேயோ ஒரு மாயை அல்லது அப்பா-அம்மா செய்த தர்மம்” என்றும் விவரித்தார்.
பதவியைப் பற்றி:
“கொடுத்த வேகத்தில் பதவியைப் பறித்தாலும் மனம் வலிக்காது. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். தலைவரின் நட்பும் உறவும் போதும். பதவி வேண்டாம். அவருடன் என் கடைசி பிரியத்து வரை இருந்தால், உலகம் அழியும் வரை தலைவர் விஜய் பெயர் நிலைக்கும். என் பெயரும் அதனுடன் இணைந்து நிலைக்கும்” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
பெயர் விளக்கம் & நாத்திகம்:
தனது பெயரை மராட்டிய சிவாஜியின் கேப்டன் ‘ராதன்’ (தோற்க மாட்டான்) என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டதாகவும், ‘வெற்றிவேல்’ வெற்றியைக் குறிப்பதாகவும் சொன்னார்.
“ஜாதி, மதம், மொழி மீது நம்பிக்கை இல்லை. நான் ஏத்தீஸ்ட் (நாத்திகர்). ஆனால் வன்னிய அரசை விட சிறந்த ஏத்தீஸ்ட்டாக நான் இருக்க முடியும்” என்று வலியுறுத்தினார்.
ஆனாலும் பழனி முருகன் கோவிலுக்கு மொட்டை அடித்து வந்ததற்கு விளக்கம் அளித்த அவர், “எதை நம்பினாலும் அது நடக்கும். அது ஒரு கல். நம்பிக்கையை இணைத்தால் அது சக்தி பெறும். முருகன் ஒருவர் இருக்க முடியாது அது வெறும் நம்பிக்கை என்று சொல்லிவிட்டு போகலாம். ஆனால், நம்பிக்கை தானே பயத்தை போக்கி வெற்றியை தரும்” என்றார். ஜோதிடத்தை “மேத்மெடிக்ஸ்” (கணிதம்) என்று வர்ணித்தார்.
தனிப்பட்ட போராட்டங்கள்:
தனது வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்ததாகக் கூறிய பண்டிட் ரிக்கி, “எங்கே செல்வது என தெரியாமல் சுடுகாட்டில் மூன்று மாதம் தூங்கியிருக்கிறேன். 25,000 பெண்களின் ஜாதகம் பார்த்திருக்கிறேன். ஒரு நாளும் தவறான பார்வை பார்த்ததில்லை. 62 வயது வரை கண்ணியமாக வாழ்ந்திருக்கிறேன்” என்றார்.
ஒரு காலத்தில் பிழைக்க வழி இல்லாமல் சுடுகாட்டில் தூங்கிய நான், ஒரு கட்டத்தில் வருமான வரி சோதனை நடந்த போது அதற்கு அபராதம் கட்டும் அளவுக்கு வந்தேன். அந்த அபராதத்தை கட்ட முடியாமல் படாதபாடு பட்டேன் என்பது தனி. ஆனால், அந்த நேரத்தில் பலர் உதவினார்கள். என்னிடம் சேமிப்பு இல்லை. சம்பாதித்ததைச் செலவு செய்துவிடுகிறேன். இறைக்கும் கிணறுதான் ஊறும்” என்று கூறினார்.
ஜெயலலிதாவுடன் தொடர்பு:
1991-ல் ஜெயலலிதாவுக்கு போஸ்ட் கார்டு அனுப்பியதிலிருந்து தொடங்கிய உறவு, 1996 தோற்றுவிடுவீர்கள் என்று சொன்னதிலிருந்து, சிறை, 2001 வெற்றி வரை துல்லியமாகக் கணித்ததாகவும், அவர்களுக்கு புத்தகம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
உமர் அப்துல்லா குடும்பம்:
மும்பை நேரிமன் பாயிண்ட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 15 நாட்கள் தங்கி, உமர் அப்துல்லாவின் மகன் பிறப்புக்கு சிசேரியன் நேரம் கொடுத்ததாகவும் சொன்னார்.
ஜோதிடத்தின் சக்தி:
“24 நிமிடங்களுக்கு மேல் பேசினால் சப்கான்ஷியஸ் மைண்ட் செல்லும். நான் ஜெயிப்பீர்கள் என்று நம்ப வைத்தால் அவர்கள் ஜெயிக்கிறார்கள். இது கணிதம்” என்று விளக்கினார்.
இந்த பேட்டி, ஜோதிடரின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் நெருக்கம் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஜோதிடப் பார்வையை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது முதலமைச்சர் விஜயுடன் நெருக்கமாக இருக்கும் பண்டிட் ரிக்கி ராதன், தொடர்ந்து பல விஐபி பிரமுகர்களுக்கு ஜோதிட ஆலோசனை வழங்கி வருகிறார்.
Summary in English : Pandit Ricky Radhan shares his long association with political leaders from Jayalalithaa to Chief Minister Vijay. He describes his rise through astrology, personal struggles, and strong friendship with the leader. He states that position is not important and the leader’s companionship is enough for him.