Posts

Showing posts with the label political friendship

“தோற்றுவிடுவீர்கள் என்று அவர்ட்ட சொன்னதுமே.." “சுடுகாட்டில் 3 மாதம் இருந்தேன்.." ராதன் பண்டிட்!

Image
சென்னை : பிரபல ஜோதிடர் பண்டிட் ரிக்கி ராதன் வெற்றிவேல் தனது அரசியல் தலைவர்களுடனான நெருக்கம், தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்கள், ஜோதிட நம்பிக்கை மற்றும் ஆன்மீகப் பார்வை குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஒரு நீண்ட பேட்டியில் பேசிய அவர், “ஜெயலலிதா அவர்களிடம் தொடங்கி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரை எனக்கு நெருக்கம் கிடைத்தது முழுக்க ஃப்ளூக், காட்ஸ் கிரேஸ்” என்று கூறினார். தனது புத்திசாலித்தனத்தை விட, நல்ல டெலிவரி மற்றும் பேச்சு திறன் காரணமாக இந்த உறவு கிடைத்ததாகவும், “எங்கேயோ ஒரு மாயை அல்லது அப்பா-அம்மா செய்த தர்மம்” என்றும் விவரித்தார். பதவியைப் பற்றி: “கொடுத்த வேகத்தில் பதவியைப் பறித்தாலும் மனம் வலிக்காது. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். தலைவரின் நட்பும் உறவும் போதும். பதவி வேண்டாம். அவருடன் என் கடைசி பிரியத்து வரை இருந்தால், உலகம் அழியும் வரை தலைவர் விஜய் பெயர் நிலைக்கும். என் பெயரும் அதனுடன் இணைந்து நிலைக்கும்” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார். பெயர் விளக்கம் & நாத்திகம்: தனது பெயரை மராட்டிய சிவாஜியின் கேப்டன் ‘ராதன்’ (தோற்க மாட்டான்) என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டதாகவும், ‘வெற்...