தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலஐ! இறப்பதற்கு முன் கடைசியாக சொன்ன வார்த்தை! பகீர் தகவல்!

சென்னை : பிரபல திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ஆர்.ராஜன் (வயது 72) இன்று மாலை அடையாறு பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் இன்று மாலை அடையாறு பகுதியில் நடைபெற்றது. தனது காரில் அடையாறு வழியாக சென்று கொண்டிருந்த கே.ஆர்.ராஜன், ஓட்டுநரிடம் "காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்துப்பா.." என்று சொல்லிவிட்டு, இறங்கி சென்றவர் ஓட்டுனர் எதிர்பார்க்காத நேரத்தில் பாலத்திலிருந்து எகிறி ஆற்றில் குதித்தார்.

அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கொடுத்து உதவி கோரினார். பின்னர் அவர்கள் மூலம் அடையாறு போலீசாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புத் துறையினர் பைபர் படகு மூலம் சுமார் ஒரு மணி நேரம் தீவிரமாக தேடியதில் ராஜனின் உடல் மீட்கப்பட்டது. உடல் மீட்கப்பட்ட உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கே.ஆர்.ராஜன் 1953ஆம் ஆண்டு பிறந்தவர். 1972ல் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் திரைப்பட செயலாக்கப் பிரிவில் பயின்று 1975ல் பட்டம் பெற்றார். அதன்பின் தூர்தர்ஷன் கேந்திரத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார்.

பின்னர் திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்புத் துறைக்கு வந்து பல படங்களை இயக்கியுள்ளார். வட சென்னை சஞ்சீவிராயன் தெருவில் வசித்து வந்த அவர், அங்கு காமராஜர் பெயரில் ஒரு பள்ளியையும் நடத்தி வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகினர் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியும் ஆழ்ந்த சோகத்திலும் உள்ளனர். பல திரைத்துறை பிரமுகர்கள் அவரது இல்லத்திற்கும் மருத்துவமனைக்கும் விரைந்து வருகின்றனர். முழு விசாரணைக்குப் பிறகே தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Summary : Veteran Tamil film director and producer K.R. Rajan, aged 72, passed away following an incident at Adyar Bridge in Chennai on Sunday evening. While travelling in his car, he stopped the vehicle, stepped out and fell into the Adyar River. Fire service teams recovered his body after a search operation and shifted it to the government hospital.