தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலஐ! இறப்பதற்கு முன் கடைசியாக சொன்ன வார்த்தை! பகீர் தகவல்!
சென்னை : பிரபல திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ஆர்.ராஜன் (வயது 72) இன்று மாலை அடையாறு பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் இன்று மாலை அடையாறு பகுதியில் நடைபெற்றது. தனது காரில் அடையாறு வழியாக சென்று கொண்டிருந்த கே.ஆர்.ராஜன், ஓட்டுநரிடம் "காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்துப்பா.." என்று சொல்லிவிட்டு, இறங்கி சென்றவர் ஓட்டுனர் எதிர்பார்க்காத நேரத்தில் பாலத்திலிருந்து எகிறி ஆற்றில் குதித்தார். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கொடுத்து உதவி கோரினார். பின்னர் அவர்கள் மூலம் அடையாறு போலீசாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பைபர் படகு மூலம் சுமார் ஒரு மணி நேரம் தீவிரமாக தேடியதில் ராஜனின் உடல் மீட்கப்பட்டது. உடல் மீட்கப்பட்ட உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கே.ஆர்.ராஜன் 1953ஆம் ஆண்டு பிறந்தவர். 1972ல் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரி...