ரவி மோகன் (ஜெயம் ரவி) உணர்ச்சி பொங்க பேட்டி: “டைவர்ஸ் கிடைக்கும் வரை படங்கள் ரிலீஸ் ஆகாது… நடிக்கவும் மாட்டேன்”
சென்னை: பிரபல நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தனது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னைகள், டைவர்ஸ் நிலை, குழந்தைகளைப் பார்க்க அனுமதி மறுப்பு, சைபர் புல்லிங் உள்ளிட்டவை குறித்து உணர்ச்சி பொங்கப் பேசியுள்ளார். சற்று முன் வெளியான இந்த பேட்டியில், “இது சினிமா சம்பந்தப்பட்டது அல்ல, முழுக்க என் பர்சனல் விஷயம்” என்று வலியுறுத்தினார்.

“சாது மிராண்டால் காடு கொள்ளாது… இனி சாது இல்லை”
பேட்டியில் ரவி மோகன், “எல்லாருக்கும் வணக்கம். நான் கூப்பிட்ட உடனே வந்ததற்கு ரொம்ப நன்றி. இது என் பர்சனல் இன்டர்வியூ. சினிமாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தொடங்கினார். தான் இத்தனை நாள் மௌனம் காத்தது தவறு என்று வருத்தம் தெரிவித்த அவர், “ரவி மோகன் ஜெயம் ரவி ரொம்ப சாப்ட்.
எதைச் சொன்னாலும் கேட்டு, புரிந்து, விட்டுக் கொடுப்பவன். ஆனால் சாது மிராண்டால் காடு கொள்ளாது. என்னை சீண்டுபவர்களுக்கு ஒன்று சொல்லிக்கிறேன். இதான் என் ஆபீஸ். மறைமுகமாக எதுவும் வேண்டாம். டைரக்டாக வாங்க. நான் ரெடி” என்று கோபத்துடன் கூறினார்.
மேலும், “என்னை பஞ்சிங் பேக்காக யூஸ் பண்ண வேண்டும் என்று நினைத்தவர்கள் எல்லாம் இப்போது வாங்க. காரத்தை பாபு மாதிரி கிக் அடிக்கப் போறேன்” என்றும் எச்சரித்தார்.
டைவர்ஸ் வரும் வரை நடிப்பு இல்லை
தனது திரைப்படங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ரவி மோகன், “என் படம் இனிமேல் ஸ்க்ரீனில் ரிலீஸ் ஆகாது. டைவர்ஸ் கிடைக்கும் வரை நான் நடிக்கப் போவதும் இல்லை. என்னால் நடிக்க முடியவில்லை. எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களைத் தாங்க முடியவில்லை” என்றார்.
குடும்பத்துக்காக உழைத்த 23 ஆண்டுகள்
தனது சினிமா பயணம் குறித்துப் பேசிய அவர், “23 வருஷம் ராத்திரி பகலாக வேலை செய்திருக்கிறேன். 95% ஆப் மை மூவீஸ் ஆர் சக்ஸஸ்புல். இரண்டாவது படத்திலேயே கலைமாமணி விருது பெற்றேன். என் சொந்த உழைப்பில் வாங்கியவை இவை. என் அப்பாவும் அண்ணனும் நாலு வருஷம் வேலை செய்யாத காலத்தில் நான் யங் ஏஜில் குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போனேன்” என்று தெரிவித்தார்.
பெண்களுக்கான ஆதரவு & பெமினிசம்
பெண்களுக்கான உரிமை குறித்து தான் எப்போதும் ஆதரவாக இருந்ததாகக் குறிப்பிட்ட ரவி மோகன், “பெண்கள் மிகப் பெரிய சக்தி. அதை வீணடிக்கக் கூடாது. ரேப் எதிர்ப்பு படம் எடுத்தவன் நான். 16 வருஷம் என் மனைவியுடன் இருந்தபோது அவர் கடவுள் என்று நினைத்து வாழ்ந்தேன்” என்றார். தான் ஒரு பெமினிஸ்ட் என்றும் வலியுறுத்தினார்.
குழந்தைகளைப் பார்க்க முடியாத வலி
பேட்டியில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ரவி மோகன், தனது இரு மகன்களையும் பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். “என் லைஃப்ஸ் ஹேப்பியஸ்ட் டே என்று ட்வீட் செய்த நாளில் இருந்து பிரச்னை. 50 லட்சம் ரூபாய் ஸ்கூல் பீஸ்.
தினமும் இரவு என் சின்ன பையனுடன் செஸ் விளையாடி தோற்றுப் போவேன். அவர்கள் மீது அன்பு இல்லை என்று சொல்பவர்கள், போன் கான்பிஸ்கேட் செய்து, பாடிகார்டு போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். என் பிள்ளைகளைப் பார்க்க விடுங்கள்” என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
“நான் வாடகை வீட்டில்… அவர்கள் கோடிக்கணக்கான வீட்டில்”
தனது தற்போதைய நிலை குறித்தும் அவர் பேசினார். “எனக்கே தெரியாத சர்ப்ரைஸாக என் மாப்பிள்ளை இன்டர்வியூ கொடுத்தார். நான் வீட்டை விட்டு வெளியே வந்தவன். இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். அவர்கள் நல்லா இருக்கிறார்கள். கோடிக்கணக்கான வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் நான் எப்படி இருக்கிறேன் பாருங்கள்” என்று கோபமும் கண்ணீரும் கலந்து பேசினார்.
இறுதியாக…
“என் டீம் இருக்கிறது. எனக்கு 25 பேர் கொண்ட குழு தேவையில்லை. என்னை உண்மையாகத் தெரிந்தவர்கள் சப்போர்ட் செய்கிறார்கள். கார்த்தி, பிரபுதேவா, ஐசிரி சார் போன்றவர்கள் உதவினார்கள். எனக்காக பொறுமையாக இருங்கள். சர்ப்ரைஸ் வெயிட்டிங்” என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த பேட்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகனின் தனிப்பட்ட பிரச்னைகள் விரைவில் தீர்வுக்கு வர வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.
Summary : Jayam Ravi shared a personal update, stating he will not release films or act until his divorce is settled. He spoke about facing personal challenges, family responsibilities, and his long career of hard work. He expressed readiness to address issues directly while requesting patience from supporters.