நாளை வாக்கு எண்ணிக்கை! களத்தை சூடாக்கிய விஜய்! பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் மக்களை நேரில் சந்தித்து பேசுவேன் என மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பனையூரில் உள்ள தனது இல்லத்தில் தவெக சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களையும் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மாலை 3 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இரவு 6 மணி வரை நீடித்தது. வேட்பாளர்களுடன் தனித்தனியாக உரையாடிய விஜய், பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கூட்டத்தில் வேட்பாளர்கள், “பிரச்சாரத்துக்கு ஏன் வரவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்” என சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த விஜய், “பிரச்சாரத்திற்கு தனி திட்டம் தயாரிக்கப்பட்டது.

ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தது. இருப்பினும், தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் மக்களை நேரில் சந்திப்பேன்” என்றார்.

மேலும், “தேர்தலுக்குப் பிறகு கிராமம் தோறும், சந்து தோறும் சென்று மக்களை சந்திப்பேன். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எந்நேரமும் நேரடியாக பனையூர் வந்து சந்திக்கலாம். நான் காத்திருப்பேன்” என தெரிவித்தார்.

கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்த விஜய், “என் சார்பாக இந்த நன்றியை அவர்களிடம் கொண்டு சேருங்கள்” என்றும் கூறினார்.

இதுதவிர, வாக்கு எண்ணிக்கையின்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நேரடியாக தன்னைத் தொடர்புகொள்ளும் வகையில் வேட்பாளர்களுக்கு மட்டும் ஒரு தனி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் உடனடியாக புகார் அளிக்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், தவெக இரட்டை இலக்க இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், விஜய்யின் இந்தப் பின்தேர்தல் உத்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Summary : Tamilaga Vettri Kazhagam leader Vijay met all party candidates in Panaiyur and held discussions. He assured that he would meet the public directly after the election results, regardless of the outcome. He thanked all workers and provided a direct contact number for candidates to report any issues during vote counting.