நாளை வாக்கு எண்ணிக்கை! களத்தை சூடாக்கிய விஜய்! பரபரப்பு அறிவிப்பு!
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் மக்களை நேரில் சந்தித்து பேசுவேன் என மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பனையூரில் உள்ள தனது இல்லத்தில் தவெக சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களையும் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மாலை 3 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இரவு 6 மணி வரை நீடித்தது. வேட்பாளர்களுடன் தனித்தனியாக உரையாடிய விஜய், பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். கூட்டத்தில் வேட்பாளர்கள், “பிரச்சாரத்துக்கு ஏன் வரவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்” என சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த விஜய், “பிரச்சாரத்திற்கு தனி திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தது. இருப்பினும், தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் மக்களை நேரில் சந்திப்பேன்” என்றார். மேலும், “தேர்தலுக்குப் பிறகு கிராமம் தோறும், சந்து தோறும் சென்று மக்களை சந்திப்பே...