“வேலைக்காக வெளியூர் சென்ற கணவன்” மகனுடன் தாய் செய்த அசிங்கம்! விசாரணையில் மிரண்ட போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலகுறி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமாரை (வயது 32) அவரது மனைவியின் கள்ளக்காதலன் கத்தியால் குத்திக் கொன்று, மாமனார் செல்லப்பனையும் கொலை செய்து, இருவரது உடல்களையும் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலை வழக்கில் மனைவி பானுப்பிரியா (32) மற்றும் கள்ளக்காதலன் பூவரசன் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பானுப்பிரியாவின் 10 வயது மகனும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

பாலகுறி பகுதியில் வசித்து வந்த ராணுவ வீரர் மகேஷ் குமார், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார். அவருக்கு பானுப்பிரியாவுடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். மகேஷ் ராணுவப் பணியில் இருந்ததால், மனைவி பானுப்பிரியா இரு மகன்களுடனும், மாமனார் செல்லப்பன், மாமியார் காளியம்மாளுடன் வசித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பூவரசனுடன் பானுப்பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி வந்ததை உறவினர் ஒருவர் கவனித்து, மகேஷ் குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து, மகேஷ் குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்து, மனைவியின் செல்போனை சோதனையிட்டபோது, கள்ளக்காதல் உறவு உறுதியானது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மகேஷ் குமாருக்கும் பானுப்பிரியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த பூவரசன், அதே இரவு 12 மணியளவில் மகேஷின் வீட்டுக்குச் சென்று சண்டையிட்டார்.

வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த பூவரசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகேஷ் குமாரை குத்திக் கொலை செய்தார். சத்தம் கேட்டு வந்த மகேஷின் தந்தை செல்லப்பனையும் கத்தியால் குத்திக் கொன்றார்.

கொலையை மறைக்கும் நோக்கில், இருவரது உடல்களையும் பெட்ஷீட்டில் சுற்றி எடுத்துச் சென்று, அருகிலுள்ள கொடுகூர் பகுதியில் ஒருவரையும், வெப்பாலம்பட்டி பகுதியில் மற்றொருவரையும் போட்டு தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.

ஊர்வாசிகள் எரிந்த உடல்களைக் கண்டு தகவல் தெரிவித்ததையடுத்து, தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பானுப்பிரியா மற்றும் பூவரசன் இடையேயான கள்ளக்காதல் உறவும், அதற்கு இடையூறாக இருந்த கணவர் மற்றும் மாமனாரை கொலை செய்தது உறுதியானது. இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், பானுப்பிரியாவின் 10 வயது மகனும் கொலை நடந்தபோது உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary in English : In Krishnagiri district’s Palaguri area, army personnel Mahesh Kumar and his father Sellappan were found deceased after a family dispute. Mahesh’s wife Banupriya had developed a close relationship with local resident Poovarasan. 

Following arguments, the two men were harmed and their bodies were later discovered burned in separate nearby locations. Police arrested Banupriya and Poovarasan. The couple’s 10-year-old son was also reportedly involved.