குளியல் அறையில் உயிர் பிரியும் முன் நடந்த கொடூரம்! கர்ப்பமான பெண் சடலத்தின் அருகே இருந்த பொருள்!

கொல்கத்தாவின் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வாழ்க்கையின் கொடூரமான திருப்பங்களால் தள்ளப்பட்ட ஒரு இளம் பெண்ணின் கதை இப்படித்தான் முடிந்தது.

அவள் பெயர் ரேவதி. வயது 28. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இளமையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன் காதலன் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டாள். ஆனால் திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் சுரேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பெற்றோர் அவளை வீட்டுக்கு ஏற்றுக்கொள்ள மறுத்தனர். தனியாக நின்ற ரேவதி, தன் வயிற்றுப்பாட்டுக்காக தனது தோழியின் உதவியினால் கொல்கத்தாவுக்கு வந்து வீட்டு வேலைகள் செய்யத் தொடங்கினாள்.

ஒரே அடுக்குமாடியில் உள்ள 13 வீடுகளில் பாத்திரம் கழுவி, தோட்ட வேலை செய்து, தரையைத் துடைத்து, தினசரி வருமானத்தை சேகரித்து வந்தாள். அந்த வேலையின் போதுதான் விக்ரம் ரெட்டி (45) என்பவரின் வீட்டில் அவளுக்கு அறிமுகம் ஏற்பட்டது.

தெலுங்கானாவில் மனைவியுடனும் இரு குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்த விக்ரம், வேலை நிமித்தமாக கொல்கத்தாவில் தங்கியிருந்தார். பணக்காரர். அதிகாரம் மிக்கவர்.

முதலில் நட்பு. பின்னர் உடல் உறவு. ரேவதி கர்ப்பமானாள்.

விக்ரம் அவளை அழைத்து, “கர்ப்பத்தை கலைத்துவிடு. ஏழு லட்சம் தருகிறேன்” என்றார். ஆனால் ரேவதி மறுத்துவிட்டாள். “நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் மனைவிக்குத் தெரியாமல் கூட நான் இருக்கிறேன். தெலுங்கானா போய் வருங்கள். எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் இந்தக் குழந்தையை காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினாள்.

ஆறு மாதங்கள் இந்தப் பேச்சு நீண்டது. ஒரு நாள் இரவு, மது போதையில் இருந்த விக்ரம் ரேவதியை தன் வீட்டுக்கு வரச் சொன்னார். ஆசை வார்த்தைகளால் அழைத்து, கர்ப்பிணியான அவளுடன் உல்லாசம் அனுபவித்தார். பின்னர் மது மயக்கத்தில் கோபம் வந்தது. கடுமையாகத் தாக்கினார். வயிற்றில் எட்டி உதைத்தார்.

ரேவதி மயக்கமடைந்தாள். உயிருக்குப் போராடினாள். ஆனால் அந்த மிருகம் அப்போதும் அவளை விடவில்லை. மயக்கத்தில் இருந்த, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுடன் மீண்டும் உடலுறவு கொண்டான்.

சிறிது நேரத்தில் ரேவதியின் உயிர் பிரிந்தது.

பயந்து போன விக்ரம், சடலத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல், அதை வீட்டின் கழிவறையில் தள்ளிவிட்டு, கதவைப் பூட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த அடுக்குமாடியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் காவல்துறையை அழைத்தனர். போலீசார் கதவை உடைத்துப் பார்த்தபோது, கழிவறையில் அழுகத் தொடங்கிய ரேவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அருகில் மது பாட்டில் மற்றும் பெரிய கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆம், உடலை வெட்டி அப்புறப்படுத்த திட்டமிட்ட விக்ரம் ரேவதி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு சடலத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பினார்.

விசாரணையில், தெலங்கானாவில் தன்னுடைய பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த விக்ரம் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் இந்த முழு கொடூரமும் வெளியானது.

இந்தச் சம்பவம் கொல்கத்தா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் வாழ்க்கையால் நசுக்கப்பட்ட ஒரு இளம் விதவை, மறுபக்கம் பொறுப்பற்று, மிருகத்தனமாக நடந்து கொண்ட ஒரு திருமணமான பணக்காரர்.

ரேவதியின் கதை, இன்று பல இளம் பெண்களின் நிலையை நினைவூட்டுகிறது — பெற்றோர் ஆதரவு இல்லாத, சமூகம் திரும்பிப் பார்க்காத, ஒரு தவறான நம்பிக்கையால் வாழ்க்கையை இழந்த ஒரு பெண்ணின் சோகமான முடிவு.

காவல்துறை வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

English Summary : In Kolkata, a young widow named Revathi worked as a domestic helper in several apartments. She developed a relationship with a married man Vikram Reddy from Telangana and became pregnant. She requested him to accept the responsibility. Later her body was found in his apartment bathroom. Police arrested him following his statement.